தனிமையில் வாடும் “வளைகுடா மனைவிகள்”

Read Time:5 Minute, 18 Second

Woman.Sad.2.jpgவளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் மலையாளிகளின் மனைவிகள், பணம் இருந்தும், வசதி இருந்தும், தனிமையில் வாடி வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து வரும் இந்தியர்களில் முக்கால் வாசிப்போர் கேரளாவைச் சேர்நதவர்கள். பல வருடங்களாக வளைகுடா நாடுகளையே தங்களது 2வது தாயகமாக கருதி வாழ்ந்த வருகின்றனர்.

இவர்களில் பலர் மனைவி, குழந்தைகுடன் வளைகுடா நாடுகளிலேயே வசித்து வந்தாலும் கூட பெரும்பாலனோரின் குடும்பங்கள் கேரளாவில் தான் வசிக்கின்றன. இத்தகையோரின் மனைவிகளுக்கு தனிமை தான் பெரும் துணையாக இருந்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

பணம் இருந்தும், வசதி இருந்தும் , சொகுசான வாழ்க்கை இருந்தும் கணவரை பிரிந்த பல வருடங்களாக தனிமையில் வசித்து வருவோரும் உண்டு. கேரள மாநிலம் கோட்டக்கல் என்ற ஊரைச் சேர்ந்த ரஜினி இதற்கு சிறந்த உதாரணம்.

இவரது கணவர் உண்ணிகிருஷ்ணன் ஜெட்டா நகரில் வேலை பார்த்து வருகிறார். அவரால் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை தான் தனது ஊருக்கு வர முடியும். அதுவும் 2 மாதங்களுக்குத் தான் விடுமுறை கிடைக்குமாம்.

தனது மகள் பிறந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகே உண்ணி கிருஷ்ணனால் தனது குழந்தையை பார்க்க முடிந்ததாம். ரஜினிக்கு 24 வயது தான் ஆகிறது. அவரது திருமணம் 2002ம் ஆண்டு நடந்தது. கட்டுப் பெட்டியான நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரஜினி. இவரது குடும்பம் மிகப் பெரியது. நான்கு சகோதரர்கள், நான்கு சகோதரிகள். கடைக் குட்டியான ரஜினியின் தந்தை 1999ம் ஆண்டு இறந்தார். அதன் பின்னர் அவரது மூத்த சகோதரர்தான் குடும்பத்தை கவனிதது வந்தார்.

இவரது கணவர் உண்ணிகிருஷ்ணன் பத்தாவது வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஜெட்டாவில் வேலைக்கு சேர முடிவு செய்த உண்ணிகிருஷ்ணன், தனது மனைவியிடம் இது குறித்து பேசியுள்ளார். உனக்கு மாதா மாதம் சம்பளப் பணத்தை சரியாக அனுப்பிவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

அவர் என்னிடம் பேசப் பேச, நீண்டதொரு பிரிவு எனக்காக தகாத்திருப்பதை உணர்ந்தேன். ஆனால் என்ன செய்வது வசதியான வாழ்க்கைக்கு இப்படிப்பட்ட பிரிவுகளை பொருத்துக் கொண்டு தான் ஆக வேண்டும் என்பதயும் என்னால் உணர முடிந்தது.

தினசரி எனது கணவருடன் போனில் பேசி விடுகிறேன். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அவர் வருவார். 2 மாதங்கள் மட்டுமே என்னுடன் இருப்பார். பிரிவு சிரமமாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். நான் வசதியாக இருக்கிறேன். அதைப் பற்றி பலரும் பெருமையாகவும், பொறாமையுடனும் பேசகிறார்கள்.

ஆனால் எனது தனிமை அவர்களுக்குப் புரியாது. அந்த சிரமங்கள் அவரக்ளுக்கு தெரியாது. எனது ஒரே துணைவன் செல்போன் தான். எனது மகளுக்கு இப்போது 3 வயதாகிறது. நிச்சயமாக அவளை நான் வளைகுடா நாட்டில் வேலை பார்க்கும் நபருக்கு கல்யாணம் செய்து தர மாட்டேன். அப்படி ஒரு நிலை வந்து விடக்கூடாது என கடவுளை தினமும் பிரார்த்தித்து வருகிறேன் என்கிறார் ரஜினி.

வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் மலையாளிகளின் குடும்பத்தார் சொந்த ஊர்களில் நல்ல வசதியுடன் இருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை முறை பெரிதும் மாறியுள்ளது. மனைவிகளை பிரிந்து இருப்பது குறித்து அவர்களிடையே மிகவும் குறைந்த அளவிலேயே கவலை உள்ளது. நிலம், வீடு, சொத்துக்கள் என தங்களது குடும்பத்தை வசதியாக வைத்திருப்பதை பெருமையாக உணரும் அவர்கள் மனைவி, குழந்தைகள் தனிமையில் இருப்பதை பெரிய குறையாக நினைப்பதில்லையாம்.

பணத்தில் புரண்டாலும், குடும்பத்துடன் இருப்பதை விட பெரிய சுகம் வந்து விடுமா என்ன?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆனையிறவு வரை எல்.ரீ.ரீ.ஈ. யினர் பின்வாங்கினால்…-அமைச்சர் ரம்புக்வெல்ல
Next post டோனிபிளேருக்கு தொழிற்சங்க கூட்டத்தில் எதிர்ப்பு