முகத்திற்கு அடிக்கடி டிஸ்யூ பயன்படுத்தலாமா?..!!

Read Time:2 Minute, 11 Second

பேபி வைப்ஸ் போலவே தற்போது பெரும்பாலானோர் ஸ்கின் கேர் வைப்ஸ் பயன்படுத்துகிறார்கள். காற்று புகாத வண்ணம் டைட்டான பாக்ஸில் ஈரப்பசையுடன் வைப்ஸ் இருக்கும்.

இதனை நாம் எளிதாக பயன்படுத்தலாம். தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவ முடியாத சமயங்களில் இதனைப் பயன்படுத்தலாம். மேக்கப் ரீமூவ் செய்வதற்கு சருமம் வறண்டு காணப்பட்டால் இதனைப் பயன்படுத்தி முகத்தை துடைக்கலாம்.

இதனைப் பயன்படுத்த எளிதாக இருந்தாலும் இதனால் ஏராளமான தீமைகள் ஏற்படுகிறது.

ஸ்கின் கேர் வைப்ஸில் ஏராளமான கெமிக்கல்ஸ் இருக்கும். எப்போதும் அவை ஈரப்பதத்துடன் இருப்பதற்காக அவற்றில் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இவற்றால் சென்ஸிட்டிவ் ஸ்கின் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் சருமம் வரண்டு போகும். இதனால் பல்வேறு சரும பாதிப்புகள் உண்டாகும்.

தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளில் தான் அதிகமாக இதனை பயன்படுத்துகிறார்கள் ஆனால் இதனை பயன்படுத்துவதால் முகம் முழுவதுமாக சுத்தம் ஆகாது. சில நுண்ணிய துகள்கள் முகத்தில் ஒட்டியபடியிருக்கும். இப்படியே அடிக்கடி செய்து வந்தால் அது சருமத்திற்கு பாதிப்பையே உண்டாக்கும்.

வைப்ஸில் இருக்கும் ஆல்கஹால் நம் சருமத்தை வறட்சியாக்கிடும். இது சீக்கிரத்திலேயே சருமத்தில் சுருக்கம் விழுவதற்கு காரணமாக அமைந்திடும். இதனால் பருக்கள், கரும்புள்ளி தோன்றும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எஸ்.ஜே. சூர்யா இன்னும் திருமணம் செய்யாதது ஏன் தெரியுமா?..!!
Next post விர்ச்சுவல் செக்ஸ் எனப்படும் மெய்நிகர் பாலியலின் நன்மைகளும் தீமைகளும்..!!!