மூடிக்கிடக்கும் கதவுகளுக்கு பின்னால் திறக்கப்படாத வாழ்க்கை..!!

Read Time:9 Minute, 54 Second

தள்ளிப்போடக்கூடாத தாம்பத்திய சிகிச்சைக்கான விளக்கம்

“குடும்ப வாழ்க்கையில் செக்ஸ் சிக்கலே பல அடிப்படை பிரச்சினைகளுக்கான காரணமாக இருக்கிறது. எனவே செக்ஸ் சிகிச்சை குடும்ப வாழ்க்கையை வளப்படுத்தும்” என்கிறார்கள் பாலியல் வல்லுனர்கள்.

எத்தனையோ பிரச்சினைகளுக்காக மருத்துவரை நாடுகிறோம். ஆனால் செக்ஸ் சிகிச்சைக்காக மருத்துவரை நாடுவதற்கு எப்போதுமே தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. “குடும்ப வாழ்க்கையில் செக்ஸ் சிக்கலே பல அடிப்படை பிரச்சினைகளுக்கான காரணமாக இருக்கிறது. எனவே செக்ஸ் சிகிச்சை குடும்ப வாழ்க்கையை வளப்படுத்தும்” என்கிறார்கள் பாலியல் வல்லுனர்கள்.

இரவு 10 மணியை தாண்டிவிட்டாலே தொலைக்காட்சிகளில் செக்ஸ் தொடர்பான ஆலோசனைகள் அலைமோதுகின்றன. முகம் காட்டிக் கொள்ளாமல் கலந்துரையாடும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் தங்கள் பாலியல் சந்தேகங்களை கேட்கத்தான் செய்கிறார்கள். நேயர்கள் நேரடியாக கேட்கத் தயங்கும் செக்ஸ் பிரச்சினைகள் பற்றி மருத்துவ நிபுணரும், தொகுப்பாளரும் பேசித்தான் வருகிறார்கள். ஆனாலும் செக்ஸ் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு தம்பதிகளிடம் முழுமையாக ஏற்படவில்லை என்கிறார்கள் பாலியல் மருத்துவ நிபுணர்கள்.

தம்பதியர் ஒவ்வொருவரும் வாழ் நாளில் சிலமுறை செக்ஸ் சிகிச்சைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் வேண்டும் என்கிறார்கள் அவர்கள். தள்ளிப்போடாமல் செக்ஸ் சிகிச்சை எடுத்துக் கொள்வது தாம்பத்தியத்திற்கு நல்லது என்கிறது ஆய்வு.

பெரும்பாலான தம்பதிகளுக்கு இடையே தாம்பத்திய பிரச்சினைகள் தலைதூக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் சிகிச்சைக்கு செல்ல தயங்குபவர்களே அனேகம். நெருக்கமான நட்பு வட்டாரத்தில் செக்ஸ் அரட்டைகள் அரங்கேறினாலும், சொந்த செக்ஸ் பிரச்சினை பற்றி அலசுவதில்லை. எங்கே ரகசியம் கசிந்துவிடுமோ என்ற அச்சமும், தவறாக புரிந்து கொள்வார்களோ, வேறுவித பிரச்சினைகளை உருவாக்குமோ? என்ற தயக்கமும் அதற்கு காரணம்.

ஆனால் செக்ஸ் பிரச்சினைகள் மூடி மறைக்கக்கூடியவை அல்ல. சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியவை. செக்ஸ் தெரபி எனப்படும் செக்ஸ் சிகிச்சை பற்றிய கண்ணோட்டம் இன்றைய தம்பதிகள் பலருக்கு தெரிந்திருப்பதில்லை. தம்பதிகள் மிகவும் அரிதாகவே செக்ஸ் சிகிச்சைக்கு வருகிறார்கள். செக்ஸ் தொடர்பான அறியாமையே இந்த தயக்கத்திற்கு காரணம்.

செக்ஸ் தெரபி என்பது தயக்கமும், தடுமாற்றமும் கொண்டது அல்ல. அந்த சிகிச்சையை நினைத்து இஷ்டத்திற்கு கற்பனை செய்துகொண்டு கஷ்டப்படவேண்டியதில்லை. அதுவும் ஒரு உளவியல் சிகிச்சை முறைதான். பேச்சு மூலமாகவும், பழக்க வழக்கம் மூலமாகவும், அணுகுமுறை மூலமாகவும், தம்பதியரிடையே இணக்கத்தை வளர்ப்பதே செக்ஸ் தெரபி. பாலியல் நிபுணர் மற்றும் உளவியல் வல்லுனர்கள் இந்த சிகிச்சையை தருகிறார்கள்.

“தம்பதிகளின் உறவில் இச்சை, வேட்கை, உச்சம் ஆகிய மூன்று கட்டங்கள் உண்டு. ஆண்-பெண் விருப்பத்தில் இருக்கும் மாற்றங்களால் ஒவ்வொரு கட்டத்திலும் இருவருக்கும் திருப்தியின்மை, பிரச்சினைகள் ஏற்படலாம்” என்கிறார்கள் பாலியல் மருத்துவ நிபுணர்கள்.

பொதுவாக எந்தெந்த மாதிரியான பிரச்சினைகள் இருக்கும் என்பதையும் அவர்கள் விளக்கு கிறார்கள். ஆண்களுக்கு விரைப்புத்தன்மை, விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். விருப்பமில்லாமை பெண்களுக்கு பலவிதங்களில் பாதிப்பை உருவாக்கலாம்.

“மூன்றில் ஒரு பங்கு பெண்களே உச்சம் அடைதல் (ஆர்கசம்) என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள், அனுபவித்து உள்ளார்கள். மற்றவர்கள் அது என்னவென்றே அறியாமலேயே தாம்பத்தியம் அனுபவிக்கிறார்கள்” என்கிறது ஒரு செக்ஸ் ஆய்வு. முழுமையற்ற முறையில் நடைபெறும் தாம்பத்தியங்களே இதற்கு காரணம்.

பெண்களுக்கு உறவின்போது வலி ஏற்படலாம். ஆரம்பகால உறவின்போது ஏற்படும் வலியல்ல இது. மருத்துவ உலகம் இந்த வலியை ‘வாஜினிஸ்மஸ்’ என்று குறிப்பிடுகிறது. மனமும், உடலும் சரிவர ஒத்துழைக்காமல் ஏற்படும் உறவு இந்த வலியை உருவாக்கும்.

பொதுவாகவே பெண்கள் செக்ஸ் பிரச்சினைகள் பற்றி பேச மிகவும் தயங்குவார்கள். மூடிய கதவுகளுக்கு பின்னால் நடக்கும் விஷயம் இதுவென்பதால் தீர்வுகளும் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. அவர்கள் உச்சம் அனுபவிக்கவில்லை என்றாலும், அதுபற்றி கணவரிடம் பேசி பிரச்சினையை தீர்க்க விரும்புவதில்லை என்பதே உண்மை. இன்பம் அளிப்பது தனது கடமை, கணவர் திருப்தி அடைந்தால் போதும் என்றே பெண்கள் நினைத்துக் கொள்கிறார்கள். கணவரும், மனைவியின் உணர்வை புரிந்து கொள்வதில்லை.

“ஆனால் பெண்களின் இந்த மன அடக்கம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டியதல்ல. செக்ஸ் சிகிச்சை தேவைப்படும் தருணம் அது.” என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்கள்.

ஒருவரின் செக்ஸ் ஆசையால் மற்றவர் தூண்டப்பட்டு ஏற்படும் உறவே செக்ஸ் சிகிச்சைக்கு அடித்தளம் அமைக்கிறது. இருவரின் இணக்கம் இல்லாமல் ஏற்படும் உறவுகள் எப்போதும் திருப்தி தருவதில்லை. வெளிப்படுத்த முடியாவிட்டாலும் அது உண்மையே. இத்தகைய தருணத்தில்தான் செக்ஸ் சிகிச்சை அவசியம்.

அது சரி, செக்ஸ் சிகிச்சை எப்படி நடைபெறும்?

“பொதுவாகவே செக்ஸ் சிகிச்சையின்போது முதலில் மருத்துவ நிபுணர்கள், தகவல்களின் ரகசியத்தன்மை குறித்து உறுதி அளிப்பார்கள். ஆலோசனை கேட்பவரின் பிரச்சினை பற்றி முதலிலேயே எந்த மதிப்பீடும் செய்யமாட்டார்கள். நம்பிக்கையும், இணக்கத் தன்மையும் உருவாக்க மேலும் தகவல்களை கேட்டுப் பெறுவார்கள். பின்னர் சிகிச்சை முறை பற்றி தீர்மானிப்பார்கள். அதுபற்றி ஆலோசனை கேட்பவரிடமும் விளக்கம் தருவார்கள். சம்மதத்தின் பெயரிலேயே பிரச்சினைக்கேற்ற சிகிச்சையை தொடங்குவார்கள்.

பொதுவாக சிகிச்சையின் ஆரம்பத்தில் செக்ஸ் தொடர்பான தவறான எண்ணங்களை விளக்கி, அதிலிருந்து விடுபட ஆலோசனை தருவார்கள். ஆடைகளை அகற்றி, உடலுறவு முறைகள் பற்றிய செயல்முறை விளக்கம் எதுவும் சிகிச்சையில் கிடையாது, துணையுடன் கூட உறவு கொள்ள வைத்து பாடம் நடத்தமாட்டார்கள்.

ரகசியத் தன்மையை பாதுகாத்து, கூச்சத்தையும், பயத்தையும் போக்கி தம்பதிக்குள் இணக்கம் ஏற்பட வைப்பதே செக்ஸ் சிகிச்சை. திருப்தியான தாம்பத்தியமே சிகிச்சையின் நோக்கம்.

தம்பதியரில் ஒருவர் மட்டும் செக்ஸ் சிகிச்சை பெறுவதால் பயன் கிடைப்பதில்லை. இருவருமே தங்களை சிகிச்சைக்கு உட்படுத்தும்போது சிறந்த பலன் கிடைக்கும்” என்பது மருத்துவர்களின் விளக்கம்.

திறமையான மருத்துவரிடம், செக்ஸ் சிகிச்சை பெற்று தாம்பத்திய திருப்தியை ஏற்படுத்துவது குடும்பத்திற்கும் நல்லது. சமூகத்திற்கும் நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த கொலைகாரக் காளான்கள் பற்றி தெரியுமா??..!!
Next post பெண்களின் ஹார்மோன்கள் சமநிலையின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள்..!!