அழகாக இருப்பதால் படவாய்ப்பை இழந்தேன்: தீபிகா படுகோனே..!!

Read Time:2 Minute, 11 Second

தீபிகா படுகோனே திரை உலகில் காலடி எடுத்து வைத்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தி பட உலகின் முன்னணி நடிகையான இவர் நடித்த ‘பத்மாவதி’ படம் பிரச்சினையில் சிக்கி இருக்கிறது. அவருடைய தலைக்கும் விலை வைக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு வீட்டில் முடங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் திரை உலகம் பற்றி கூறிய தீபிகா படுகோனே…

“நான் நடிக்க வந்த போது இந்தி பட உலகில் படுக்கைக்கு சென்றால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். அதிஷ்டவசமாக பட வாய்ப்புக்காக நான் அனுசரித்து போகவில்லை. ஆனால் எல்லோருக்கும் என்னைப்போல் நடப்பது இல்லை. நான் இங்கு பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன்.

நான் அழகாக இருப்பதாலும் சில பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். நான் இப்போது 2 படங்களில் பணிபுரிந்த ஒரு டைரக்டர் முன்பு, “நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். இந்த கதைக்கு ஒத்துவர மாட்டீர்கள்” என்றார்.

கதாபாத்திரத்துக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்வேன் என்பது அவருக்கு தெரியாதா? நடிக்க சொல்லி இருந்தால் கதாபாத்திரத்துக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்வேன். ஆனால் அப்படி சொல்லவில்லை. நான் பட்ட கஷ்டம் என் குடும்பத்துக்கு தெரியும். மற்றவர்களுக்கு தெரியும். என் கடின உழைப்பால் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன். ஒரே இரவில் அனைத்தும் நடந்துவிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய் வயது பெண்ணுடன் இளைஞர்… இறுதியில் நிகழ்ந்த கொடூரம்..!!
Next post வாசனை வீசுது.. வாயெல்லாம் மணக்குது..!!