உடல் உஷ்ணத்தை குறைக்க மோர் குடிக்கலாம்..!!

Read Time:4 Minute, 8 Second

உடல் வறண்டு இருக்கும் நேரத்தில் ஏதாவது ஜில்லென குடித்தால் போதும் என்று இருக்கும். ஏனெனில் நம்மை அறியாமலேயே நாம் வறண்டு இருப்போம். சக்தியின் அளவும் குறைந்து இருக்கும். இதன் காரணமே ஏதாவது குடித்தால் போதும் என்ற நினைப்பு எழும்.

* கொழுப்பற்ற தயிர் மிகவும் நல்லது. மோர் மிக மிக நல்லது. நாள் ஒன்றுக்கு இரண்டு கிளாஸ் மோராவது குடியுங்கள். ஆனால் வீட்டில் செய்யப்படும் கொழுப்பு நீக்கிய மோர் ஒரு நல்ல உணவு. அதில் அனைத்துச் சத்துக்களும் உள்ளன. இது நிதானமாகவே குடலில் உரிஞ்சப்படுகிறது.

* குடலில் உள்ள மசாலா உணவுகளை கழுவி எடுத்து விடும். பொதுவில் இதில் சீரகம், இஞ்சி, கொத்தமல்லி, பெருங்காயம் போன்றவற்றினை சேர்ப்பது வயிற்றுக்கு மேலும் நன்மை பயக்கின்றது. உடல் உஷ்ணத்தினை குறைக்கின்றது.

* குடலில் ஒட்டிக் கொள்ளும் எண்ணெய் பிசுபிசுப்பினை சுத்தமாய் நீக்கி விடுகின்றது.

* ஜீரண சக்தியினை கூட்டுகின்றது.

* வயிற்று உபாதைகளை நீக்குகின்றது.

* உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க உதவுகின்றது.

* உடலில் கால்ஷியம் சத்து கிடைக்க பெரிதும் உதவுகின்றது.

* வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. பிகாம்ப்ளெக்ஸ், டி சத்து நிறைந்தது. ஒருமுறை மோர் எடுத்துக் கொள்வது சுமார் 20 சதவீதம் சில வைட்டமின் சத்துக்களை தந்து விடுகின்றது.

* மோரில் உள்ள ரிபோஃப்ளேவின் உணவினை சத்தாக மாற்றவும், ஹார்மோன்கள் சுரப்பதற்கும், ஜீரண சக்திக்கும் உதவுகின்றது. உடலில் நச்சுத்தன்மை நீங்கவும், கல்லீரல் நன்கு இயங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி கூடவும் உதவுகின்றது.

* மோரில் உள்ள சில புரதங்கள் கொழுப்பு குறைவதற்கும் கிருமி நாசினியாகவும், வைரஸினை எதிர்ப்பதாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மோர் குடிப்பது ரத்தக் கொதிப்பினை வெகுவாய் கட்டுப்படுத்துகின்றது.

* தீரா அசிடிடி இருக்கின்றதா. இது கோடையில் மேலும் கூடும். மோர் அசிடிடி நெஞ்செரிச்சலை வெகுவாய் கட்டுப்படுத்தும்.

* மோர் மலச்சிக்கலை நீக்கும்.

* மோரில் புரதம், வைட்டமின்கள், கால்ஷியம், பொட்டாசியம், என்ஸைம்கள் என இருக்கின்றன. ஆனால் கொழுப்பு கலோரி சத்து மிக மிகக் குறைவு. ஆக இது இயற்கையாகவே ஒருவருக்கு எடை குறைப்பு தருகின்றது.

* இதிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள்

– வைட்டமின் உற்பத்தி செய்கின்றன.
– ஜீரணத்திற்கு உதவுகின்றன.
– நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டுகின்றன.
– சத்துக்களை உருவாக்குகின்றன.
– இருதய நோயினை தவிர்க்கின்றன.
– புற்று நோயிலிருந்து காக்கின்றன.
* உலகின் எலும்புகள் வலுவாய் இருக்கின்றன.
* அல்சர் எனும் வயிற்று, குடல் புண்களுக்கு மோர் இயற்கை வைத்தியம்.
* வாய் புண்களை தவிர்க்கின்றது.
* மூல நோய்க்கு மோர் உட் கொள்வது நல்லது.
* மோர் சளிக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐஸ்வர்யா ராயை அழவைத்த போட்டோ கிராபர்கள்..!!
Next post தூக்கத்தில் உங்களுக்கு செக்ஸ் கனவுகள் வருகிறதா? படித்து தெரிந்து கொள்ளுங்கள்.!!!