‘விசுவாசம்’ படத்தில் அஜித்துடன் இணையும் யுவன்?..!!

Read Time:2 Minute, 22 Second

அஜித், சிவா கூட்டணியில் வெளியான ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்கள் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் அடுத்ததாக வெளியான ‘விவேகம்’ படம் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும், ரசிகர்களிடமும், வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க இருக்கிறார். இப்படத்துக்கு விசுவாசம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரிக்க இருப்பதாகவும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய இரு படங்களுக்கும் அனிருத் இசையமைத்திருந்தார். ஆனால் அஜித்தின் அடுத்த படமான ‘விசுவாசம்’ படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே யுவன் ஷங்கர் ராஜா, அஜித்தின் `பில்லா’, `ஏகன்’, `மங்காத்தா’, `பில்லா 2′, `ஆரம்பம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே ஆல்பம் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அஜித் – யுவன் மீண்டும் இணைந்தால் அது அஜித் ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு 2018 ஜனவரியில் தொடங்க இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் சிறுநீர் பாதிப்பை கட்டுப்படுத்தும் இயற்கை வழிகள்..!!
Next post கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த மனைவி அடித்து கொலை: கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு..!!