கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த மனைவி அடித்து கொலை: கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

Read Time:3 Minute, 6 Second

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்ல அள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 38). இவருக்கும் மோட்டாங்குறிச்சியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கார்த்திகா என்ற மகளும், அன்பரசன் என்ற மகனும் உள்ளனர்.

சுமார் 5 மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஆறுமுகத்திற்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இது பற்றி அவரது மனைவி லட்சுமிக்கு தெரியவந்தது. அவர் கள்ளக்காதலை கைவிடுமாறு கணவரிடம் வற்புறுத்தினார். ஆனால் அவர் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்து விட்டார். மேலும் அவர் மனைவியை அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி லட்சுமி அவருடைய தந்தை ராதாவிடம் கூறினார். அவரும் பலமுறை நேரில் வந்து மருமகனுக்கு அறிவுரை வழங்கினார். இருந்தும் அவர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. கள்ளக்காதலியை அடிக்கடி சந்தித்து வந்தார்.

நேற்று காலை ஆறுமுகம் தனது மனைவி லட்சுமியுடன் காட்டுப்பக்கம் சென்று உள்ளார் அப்போது ஆறுமுகத்தின் செல்போனுக்கு போன் வந்தது. அதனை எடுத்து லட்சுமி பேசினார். மறுமுனையில் கணவரின் கள்ளக்காதலி பேசினார். அவரை லட்சுமி கண்டித்தார். இனிமேல் என் கணவரிடம் பேச கூடாது என்று கூறினார். இதனை அந்த பெண் ஆறுமுகத்திடம் கூறி உள்ளார் . அவரது பேச்சை கேட்டு ஆறுமுகம் தனது மனைவி லட்சுமியிடம் சண்டை போட்டு அவரை தாக்கி உள்ளார்.

மேலும் லட்சுமியின் தலையை பிடித்து சுவற்றில் மோதியதில் பலத்த அடிபட்ட அவர் சத்தம் போட்டு உள்ளார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர் . அதற்குள் ஆறுமுகம் வீட்டை விட்டு தப்பி ஓடி விட்டார் . மயங்கிய நிலையில் இருந்த லட்சுமியை தண்ணீர் தெளித்து பார்த்து உள்ளனர் .ஆனால் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் லட்சுமியின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கடத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஆறுமுகத்தின் மீது கொலை வழக்குபதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘விசுவாசம்’ படத்தில் அஜித்துடன் இணையும் யுவன்?..!!
Next post பிரிட்டனில் பத்மாவதி படத்துக்கு சென்சார் போர்டு ஒப்புதல்..!!