பிரபாவை மடக்கி பிடிப்பதற்காக முல்லையில் படை நடவடிக்கையாம்- இராணுவத்தளபதி தகவல்

Read Time:2 Minute, 27 Second

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பிடிப்பதற்காக பாதுகாப்பு படையினர் முல்லைத்தீவு பகுதியிலுள்ள பல்வேறு முனைகளில் தற்போது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத்பொன்சேகா தினமின நாளேடுக்கு வழங்கிய நேரடி நேர்காணலில் தெரிவித்துள்ளார். என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத்தளபதி தினமின விற்கு மேலும் கூறியிருப்பவை வருமாறு பாதுகாப்பு படையினர் முல்லைத்தீவுப்பகுதியை மீட்கும் நோக்கில் பல்வேறு முனைகளில் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைதுசெய்யும் முகமாகவே இந்த தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர் முல்லைத்தீவு நோக்கிய இராணுவ நடவடிக்கையில் 56,57,58 மற்றும் 59ஆவது டிவிஷன் இராணுவப் படையணிகள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன அத்துடன் அதிரடிப்படையினரும் அதில் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றனர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவிலுள்ள பதுங்கு குழிஒன்றிலேயே இருக்கின்றார் இராணுவத்தினர் தற்போது முல்லைத்தீவிலுள்ள ஒன்று தொடக்கம் நான்கு வரையான விடுதலைப்புலிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர் பாதுகாப்பு படையினர் முல்லைத்தீவில் நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் பரப்பினில் அவர்கள் இறுதி இலக்கை அடைய இன்னம் 21 கிலோ மீற்றர் தூரமே உள்ளது கிழக்கை பாதுகாப்பு தரப்பினர் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்டமை போன்று வடக்கையும் மீட்பர் என்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post – தேர்தல் ஆட்சேப வழக்குகளுக்கு மேலதிகமாக கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவும் தாக்கல்
Next post குடித்த தாய்-போதையுடன் பிறந்த குழந்தை!