– தேர்தல் ஆட்சேப வழக்குகளுக்கு மேலதிகமாக கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவும் தாக்கல்

Read Time:2 Minute, 45 Second

கிழக்கு மாகாண தேர்தலின் போது அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆயுதக்குழுவினர் மூலம் பெரும் மோசடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டன எனத்தெரிவித்து அத்தேர்தல் முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுஒன்றும் நேற்றுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது ஏற்கனவே கிழக்கமாகாணசபையின் அம்பாறை, திருகோணமலை, மட்டகளப்பு ஆகிய மூன்று மாவட்டங்களுக்குமான தேர்தல் முடிவுகளை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தனித்தனி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன இத்தேர்தலில் போட்டியிட்ட ஐ.தே.க வேட்பாளர்கள் இது தொடர்பான மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர் அவற்றை ஒரு நீதியரசைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் தேர்தல் நீதிமன்றமாக இயங்கி பரிசீலனைக்கு எடுக்கவிருக்கிறது இந்நிலையில் இந்த தேர்தல் ஆட்சேபனை வழக்குகளுக்குப் புறம்பாக இப்போது இதே தேர்தல் ஆட்சேபனை விடயத்தை முன்வைத்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தனியாகத் தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது. அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்ட ஆறுமுகம், ஜெகன், மகராஜா ஜெகதீஸ்வரன், ஆகியோரே ஒன்று சேர்ந்த இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்றுத்தாக்கல் செய்தனர் அவர்கள் தமக்கு இந்த மோசடித்தேர்தல் மூலம் இழைக்கப்பட்ட அநீதிக்கும் தங்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமைக்கும் நஷ்டயீடாக ஒருகோடி ரூபா வழங்குமாறு உத்தரவிடும்படி தமது மனுவில் நீதிமன்றத்தை கோரியுள்ளனர் இந்த மனுவில் பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பந்தப்பட்ட செயலாளர் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்கள் தேர்தல் ஆணையாளர், சட்டமா அதிபர் உட்பட பலரின் பெயர்கள் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக தமிழக எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா கூறுகிறார்
Next post பிரபாவை மடக்கி பிடிப்பதற்காக முல்லையில் படை நடவடிக்கையாம்- இராணுவத்தளபதி தகவல்