புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, புனரமைக்கப்படும் புங். திருநாவுக்கரசு வித்தியாலத்தை பார்வையிட்ட, வ. மா.ச. உறுப்பினர் திரு.விந்தன்.. (படங்கள்)
புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, புனரமைக்கப்படும் புங். திருநாவுக்கரசு வித்தியாலத்தை பார்வையிட்ட, வ. மா.ச. உறுப்பினர் திரு.விந்தன்.. (படங்கள்)
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மூலம் புனரமைக்கப்படும் யாழ். புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயத்தை மாகாண அதிகாரிகள் சகிதம் பார்வையிட்டார் என். கனகரட்ணம் விந்தன்!
புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள், “புங்குடுதீவு சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பாக, கடந்த வருடம் யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) யாழ். தீவுப்பகுதி அமைப்பாளருமான என். கனகரட்ணம் விந்தன் அவர்களிடம் யாழ். புங்குடுதீவு பகுதியில் அமைந்துள்ள ஊரைதீவு கிராமத்தில் உள்ள திருநாவுக்கரசு வித்தியாலயத்தைப் புனரமைத்து மீளத் திறந்து அப்பகுதி மாணவர்களின் கல்வி மேம்பாட்டை உயர்த்தும்படி கோரியிருந்தார்.
இதற்கமைய கனகரட்ணம் விந்தன் அவர்கள் கடந்த வருடம் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் திரு. த. குருகுலராஜா தலைமையில் நடந்த கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் இவ்விடயத்தைப் பல தடவைகள் பிரஸ்தாபித்து, அமைச்சு ஆலோசனைக் குழுவால் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, பாடசாலைக் கட்டடத்தைப் புனரமைப்பதற்கான மதிப்பீட்டினை வடக்கு மாகாண கல்வித் திணைக்களப் பொறியியலாளர் திரு.சுரேஸ் அவர்களால் நான்கு மில்லியன் (நாற்பது இலட்சம்) செலவு விபரம் என மதிப்பீடு செய்யப்பட்டு, 2017ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் பாதீட்டில் உள்ளடக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது.
கட்டட புனரமைப்பு வேலைக்கான ஒப்பந்தத்தினை வடக்கு மாகாண கட்டடத் திணைக்களம் பொறுப்பெடுத்து திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு. ஜெயசீலன் தலைமையில் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு, தொண்ணூறு வீதம் வேலைகள் நிறைவடைந்த நிலையில்,
17.11.2017 அன்று வேலைத்திட்டத்தின் முன்னேற்றங்களை, வடக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) யாழ். தீவுப்பகுதி அமைப்பாளருமான என்.கனகரட்ணம் விந்தன் நேரில் சென்று பார்வையிடுவதனைப் படங்களில் காணலாம்.
தகவல் & படங்கள்… ஊடகப்பிரிவு சார்பாக, திரு.விந்தன் கனகரெட்ணம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating