கவர்ச்சி படத்தை வெளியிட்ட வித்யுலேகா..!!

Read Time:1 Minute, 51 Second

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகை வித்யுலேகா. இவர் நடிகர் மோகன் ராமின் மகள். கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்த கௌதம் மேனனின் ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படத்தில் ஜென்னி எனும் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வந்த ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார். மேலும், வீரம், ஜில்லா, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க, வேதாளம் உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.

மிகவும் குண்டாக இருந்த இவர் சில காலமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது உடல் எடையை குறைத்து, கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒரு நடிகை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் போது மக்கள் அவரை கவர்ச்சியாக பார்க்கவோ, உணரவோ முடியாது என்று பதிவிட்டுள்ளார். கவர்ச்சி உடையில் இருக்கும் வித்யுலேகாவின் அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுவரை காமெடி ரோலில் மட்டும் நடித்து வந்த இவருக்கு தற்போது ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலித்து ஏமாற்றிய பெண்… காதலன் கொடுத்த ஷாக்கான தண்டனை..!! (வீடியோ)
Next post மரண கிணறு – இங்கு குளித்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை..!! ( வீடியோ)