தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக தமிழக எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா கூறுகிறார்

Read Time:1 Minute, 35 Second

தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அல்கொய்தாவினதும் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன இதன் காரணமாக தமிழ்மக்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் டில்லியில் நடத்திய திறனாய்வு கூட்டத்தில் தமிழக கரையோரங்களில் கடல்சார் காவல் நிலையங்கள் அமைக்க பரிந்துறை செய்யப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய கருணாநிதி அரசு அதனை நிறைவேற்றவில்லை என்று ஜெயலலிதா மேலும் குற்றம் சாட்டியுள்ளார். 1994ம் ஆண்டு தமது ஆட்சியின் போது 60கடல்சார் காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் பிரவேசம் கட்டுபடுத்தப்பட்டது என தெரிவித்த ஜெயலலிதா வடக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களை அடுத்து இந்தியக் கடற்படையினர் இரண்டு கப்பல்களைப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் பாக்குநீரிணையின் தனுஷ்கோடி அகலயாவை கடற்பிரதேசங்களில் கப்பல் சேவைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முஷாரப்புக்கு எதிராக 10 அம்ச குற்றப்பத்திரிகை – நவாஸ் ஷெரீப்பின் கட்சி தயாரிப்பு
Next post – தேர்தல் ஆட்சேப வழக்குகளுக்கு மேலதிகமாக கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவும் தாக்கல்