விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா..!!

Read Time:1 Minute, 56 Second

ஆர் ஸ்டுடியோஸ், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரே‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அண்ணா துரை’.

ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி – டயனா சாம்பிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் இவர்களுடன் மகிமா, ஜூவல் மேரி, ராதா ரவி, காளி வெங்கட், நளினிகாந்த், ரிந்து ரவி உள்பட பலர் நடித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான ராதிகா சரத்குமார் பேசும் போது,

விஜய் ஆண்டனியை சில வருடங்களுக்கு முன்பே தெரியும் என்றாலும் அவர் இருக்கும் இடமே தெரியாது. ஒரு பூனை போல பதுங்கியே இருப்பார். நடிகர் விஜய்யும் அமைதியானவர் என்றாலும் திரையில் தான் யார் என்பதை வெளிப்படுத்துவார். அதேபோல் தான் விஜய் ஆண்டனியும். பல திறமைகளை கொண்டவராக இருந்தும், அமைதியாக பூனை போலவே இருந்தாலும் திரையில் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார். அவரை திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

இவ்வாறு கூறினார்.

பாடல் வெளியீட்டின் போதே பாடல்கள் அனைத்தும் விஜய் ஆண்டனியின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் www.vijayantony.com என்ற இணையதளத்திற்கு சென்று பாடல்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சில நொடிகளில் விமானத்தை தாக்கிய மின்னல்: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்..!! (வீடியோ)
Next post வாரத்துக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?..!!!