சுமார் 1,100 பிரிண்ட்டுகளுடன் வெளியாகும் முதல் தமிழ்ப் படம்; “தசாவதாரம்” சென்னையைப் பொருத்தவரை 20 நாள்களுக்கு ஹவுஸ்ஃபுல்

Read Time:4 Minute, 9 Second

ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த “தசாவதாரம்’ படம், ஜூன் 13-ம் தேதி வெளியாகிறது. சுமார் 1,100 பிரிண்ட்டுகளுடன் வெளியாகும் முதல் தமிழ்ப் படம்; தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படும் படம்; உலகிலேயே முதல்முறையாக ஒரு நடிகர் 10 வேடங்களில் நடிக்கும் படம் போன்ற பல பெருமைகளை உள்ளடக்கிய “தசாவதாரம்’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு ஜூன் 8 – ம் தேதி தொடங்கியது. சென்னையைப் பொருத்தவரை முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே, ஜூன் 23-ம் தேதி வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அடுத்தடுத்த இரண்டு நாள்களில் தொடர்ந்து 20 நாள்களுக்கு சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு முடிந்து விட்டது. சாஃப்ட்வேர் நிறுவனங்கள் உள்பட பல கார்ப்பரேட் கம்பெனிகள் 500, 1000 என டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்துள்ளன. சென்னையிலுள்ள மாயாஜால் காம்ப்ளக்ஸில் உள்ள 10 திரையரங்குகளிலும் தினசரி 4 காட்சிகள் வீதம் ஒரு நாளைக்கு 40 காட்சிகள் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்தனை களேபரத்துடன் வெளியாகும் “தசாவதாரம்’ படத்தின் வசூல் நிலைமை எப்படி இருக்கும்? என திரையரங்கு நிர்வாகிகளிடம் கேட்டபோது… மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸில் ரூ. 120, மற்ற திரையரங்குகளில் ரூ. 100, புறநகர்ப் பகுதியில் உள்ள திரையரங்குகளிலும் ரூ. 100 என டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. ஒரு டிக்கட்டுக்கு சராசரியாக ரூ.100 கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்துள்ள ரவிச்சந்திரனின் வியாபாரத் திறன், விளம்பர உத்தி போன்றவற்றாலும் இதுவரை படத்தைப் பற்றி வெளியான செய்திகளாலும் “தசாவதாரம்’ படத்தை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதை மறுக்க இயலாது. தவிர, கமல் – கே.எஸ்.ரவிகுமார் கூட்டணியில் உருவான “அவ்வை சண்முகி’, “பஞ்ச தந்திரம்’, “தெனாலி’ போன்ற படங்கள் கமர்ஷியல் ரீதியாக பெற்ற வெற்றியும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுமார் 52 திரையரங்குகளில் “தசாவதாரம்’ திரையிடப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற ஊர்களிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகத் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

படத்தை தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனே நேரடியாக உலகம் முழுவதும் வெளியிடுவதால் திரையிட்ட ஒரு மாதத்துக்குள் படத்தின் பட்ஜெட் தொகை வசூலாகி விடும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். நம்பிக்கைதானே வாழ்க்கை…!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்கொரியாவில்; அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதி எதிர்ப்பு பேரணியில் 80ஆயிரம் பேர்
Next post இந்த வார ராசிபலன் (13.06.08 முதல் 19.06.08 வரை)