கடு­மை­யான மன அழுத்தம் மார­டைப்பை போன்று இரு­த­யத்தை சேதப்­ப­டுத்தும் அபாயம்.!!

Read Time:2 Minute, 52 Second

கடு­மை­யான உணர்வு ரீதி­யான மன அழுத்­த­மா­னது மார­டைப்பைப் போன்று இரு­த­யத்தை சேதப்­ப­டுத்­து­வ­தாக பிரித்­தா­னிய மருத்­துவ ஆய்­வா­ளர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

பிரித்­தா­னி­யாவில் மேற்­படி உணர்வு ரீதி­யான மன அழுத்தப் பாதிப்பால் குறைந்­தது 3,000 க்கு மேற்­பட்ட வய­து­வந்­த­வர்கள் இரு­தய பாதிப்­புக்­குள்­ளா­வ­தா­கவும் அந்தப் பாதிப்பு இரு­தய தசை­களை நிரந்­த­ர­மாக பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­கவும் அபெர்டீன் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த மருத்­துவ ஆய்­வா­ள­ர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அவர்­க­ளது ஆய்வின் முடி­வுகள் அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்தில் அன­ஹெயிம் எனும் இடத்தில் கடந்த சனிக்­கி­ழமை ஆரம்­ப­மாகி நாளை புதன்­கி­ழமை நிறை­வ­டை­ய­வுள்ள அமெ­ரிக்க இரு­தய சங்­கத்தின் விஞ்­ஞானக் கூட்டத் தொடரில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ளன.

கடும் மன அழுத்­தத்­துக்­குள்­ளாகி இருதய பாதிப்பு ஏற்­பட்ட 37 பேரிடம் நீண்ட கால அடிப்­ப­டையில் இந்த ஆய்வு முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் போது அவர்­க­ளது இரு­த­யத்­தி­லான பாதிப்பு நிலை குறித்து அல்ட்ரா சவுண்ட் தொழில்­நுட்பம், எம்.ஆர்.ஐ. ஊடு­காட்டும் பரி­சோ­தனை என்­ப­வற்றை பயன்­ப­டுத்தி ஓழுங்கு முறை­யாக பரி­சோ­திக்­கப்­பட்­டது.

தமது ஆய்வில் கடு­மை­யான உணர்வு ரீதி­யான மன­அ­ழுத்­த­மா­னது இரு­த­யத்தில் நிரந்­த­ர­மாக பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வது கண்­ட­றி­யப்­பட்­ட­தாக ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்

கடும் உணர்வு ரீதி­யான பாதிப்­புக்­குள்­ளா­ன­வர்கள் காலப்போக்கில் முழு­மை­யாக குண­ம­டைந்து விடு­வார்கள் என தவ­றாக கருதி அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு நீண்ட கால சிகிச்சை வழங்­கப்­ப­டு­வ­தில்லை என குற்­றஞ்­சாட்­டிய ஆய்­வா­ளர்கள், அவர்­க­ளுக்கு மார­டைப்பால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் அதே மருந்­துகள் வழங்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் ஆடும் நடனம் இன்னும் அழகு. தாவணியில் இவர்கள் ஆடும் கலக்கல் நடனத்தை நீங்களே பாருங்கள்..!! (வீடியோ)
Next post இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் டிராகன் பழம்..!!