தொடர்ந்து தள்ளிப்போகும் கமல் படம்..!!

Read Time:1 Minute, 59 Second

கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்’.

இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தில் குறிப்பிட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. சில பிரச்சனைகளால் `விஸ்வரூபம்-2′ கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், `விஸ்வரூபம் 2′ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக தெரிவித்த கமல், அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார். இதுஒருபுறம் இருக்க `விஸ்வரூபம் 2′ படத்தின் டிரைலர் சிறப்பாக வந்திருப்பதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் கமல் ஒரு பாடலை பாடியிருப்பதாகவும் ஜிப்ரான் கூறியிருந்தார்.

இவ்வாறாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் `விஸ்வரூபம் 2′ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தலைப்பில் உருவாகி வரும் `விஸ்வரூபம்-2′ படத்தில், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீர்த்துப் போகும் போராட்டம்..!! (கட்டுரை)
Next post மழை பெய்யும் போது இதை மட்டும் செய்யாதீங்க… உங்க உயிரே போக சான்ஸ் இருக்கு….!! (வீடியோ)