பற்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள்..!!

Read Time:2 Minute, 18 Second

பற்சிதைவு தொந்தரவால் பெரும்பாலானவர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பற்சிதைவு ஏற்படுவதற்கு பற்களை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துகளை கொண்ட உணவு பதார்த்தங்களை சாப்பிடாததும் முக்கிய காரணம். வைட்டமின் ஏ-வை உள்ளடக்கிய உணவு வகைகள் பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டவை. அதனால் முட்டை, மீன், பால் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின்- டி ஊட்டச்சத்து கொண்ட உணவுகள் பற்களை வலுப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றலும் கொண்டவை. காளான்கள், சால்மன் மீன்கள், பால் பொருட்களை அதிகம் உணவில் சேர்ப்பதன் மூலம் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களை பெறலாம்.

கால்சியம் சத்துக்களை கொண்ட உணவுகள், பற்களுக்கு வலிமை சேர்க்கும். முட்டை, ஈரல் ஆகியவற்றை சாப்பிட்டு வருவது பற்களுக்கு நல்லது.

பற்கள் சுத்தமாக இல்லாமல் இருப்பதும் பற்சிதைவுக்கு காரணமாகும். அதனால் பற்களில் உணவுத்துகள்கள் படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவு துகள்கள் பல் இடுக்குகளில் கிருமிகள் உருவாக காரணமாகி, பல் அடுக்குகளை சிதைக்க தொடங்கி விடும். இறுதியில் பற்களின் அடிப்பகுதி வரை சென்று பல் நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வலியை ஏற்படுத்தும்.

காலையில் மட்டும் பல் துலக்காமல் இரவு தூங்க செல்வதற்கு முன்பும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். பற்களின் மீது ஒட்டும் தன்மை கொண்ட உணவுகளை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப்பொருட்களை உள்கொள்வதும் பற்களுக்கு நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post `குரு உச்சத்துல இருக்காரு’ படக்குழுவுக்கு சினேகன் வைத்த கோரிக்கை..!!
Next post இரவு நேரத்தில் தந்தையின் போனில் சிறுமி செய்த அதிர்ச்சிக் காரியம்..!!