`குரு உச்சத்துல இருக்காரு’ படக்குழுவுக்கு சினேகன் வைத்த கோரிக்கை..!!

Read Time:2 Minute, 29 Second

அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில், தன சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குரு உட்சத்துல இருக்காரு’.

குரு ஜீவா கதாநாயகனாகவும் பைசா திரைப்படத்தில் நடித்த ஆரா கதாநாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில், பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், இமான் அண்ணாச்சி, மனோ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

குரு உட்சத்துல இருக்காரு படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும் பிக்பாஸ் புகழ் சினேகன் பங்கேற்றனர்.

இவர்கள் முன்னிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது.

குரு உச்சத்தில இருக்காரு திரைப்படத்திற்கு இசையமைத்த தாஜ் நூர், இதில் வேலை பார்த்தது தனக்கு ஒரு புது அனுபவத்தை தந்ததாகவும், பாடல் காட்சிகள் படப்பிடிப்புகள் முடிந்த பின்னால் இசையமைத்தது சவாலாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

சினேகன், பா. விஜய் மற்றும் மீனாட்சி சுந்தரம் இந்த திரைப்படத்தின் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்கள்.

அவருக்கு பின்னால் பேசிய பிக்பாஸ் புகழ் சினேகன், “குரு உட்சத்துல இருக்காரு திரைப்படத்திற்கு ஒரு பிரோமோ பாடல் எழுத சொன்னார்கள், தாஜ் நூர் இசையை கேட்ட பின்னர் வந்த பாடல் தான் ‘ஆசை தான்’.” அதுமட்டுமின்றி அந்த பாடலுக்கும் காட்சியமைக்குமாறு தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் சினேகன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய பெற்றோருக்கு காஜல் கூறிய பதில்..!!
Next post பற்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள்..!!