உறவின்போது பெண்களுக்கு உணர்ச்சி அதிகமானால் என்ன செய்வார்கள்?..!!

Read Time:3 Minute, 53 Second

உடலுறவில் ஆண்கள் தான் தங்களுடைய முழு உணர்ச்சிகளையும் வெளிக்காட்டுவார்கள். பெண்கள் தங்களுக்குள்ளாகவே வைத்துக்கொள்வார்கள் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். அது ஓரளவு உண்மை தான்.

பெண்கள் தங்களுடைய மனதில் உள்ளதை குறிப்பாக, உடலுறவு சார்ந்த விஷயங்களை வெளிக்காட்டுவதில்லை தான்.

ஆனால் அவர்களுக்கு உணர்ச்சி அதிகரித்துவிட்டதை அவர்களுடைய சில நடவடிக்கைகள் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அப்படி உணர்ச்சிப் பெருக்கின் மிகுதியால் அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள். என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

காதல் கடி என்பது எப்போதுமே சுகமான விஷயம் தான். தன்னுடைய காதலின் மேலும் காதலனின் மேலும் அவர்களுக்கு இருக்கும் அன்பின் மிகுதியை வெளிக்காட்டும் தருணங்களில் அதுவும் ஒன்று. அவர்கள் உணர்ச்சி மிகுதியால் செல்லமாகக் கடிப்பது அப்போது பேரானந்தமாக இருக்கும். ஆனால் உடலுறவுக்குப் பின், அந்த இடத்தைப் பார்க்கும்போதெல்லாம் அதனுடைய வலி தெரிய ஆரம்பிக்கும்.

பெண்கள் ஆண்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக நெருக்கி அணைத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் ஆணின் முதுகுப் பகுதியில் வைத்து அழுத்தி, இரண்டு கை நகங்களாலும் அவர்களுடைய முதுகை அப்படியே கீறி விட்டால் இருவருக்குமே இன்பம் அதிகரிக்கும். ஆனால் என்ன! அவருக்கு கீறல் ஏற்பட்டால் சரி, காயம் உண்டாகும் அளவுக்கு வன்முறையில் ஈடுபடாதீர்கள்.

காது மடல்களில் உணர்ச்சியைத் தூண்டும் நரம்புகள் உண்டு. குறிப்பாக, ஆண்களுக்கு காது மடல்களில் லேசாக வருடிக் கடித்துவிட்டால் உணர்ச்சிப் பெருக்கெடுக்க ஆரம்பித்துவிடும். ஆனால் அதையும் மென்மையாகத்தான் கையாள வேண்டும்.

காது மடல்களைக் எப்படி கவ்விக்கொண்டு கடித்தீர்களோ அதேபோல், ஆண்களுடைய மணிக்கட்டுப் பகுதிக்கு மேல் உள்ள கை மற்றும் புஜங்களில் பற்களால் கடித்து உணர்ச்சியைத் தூண்டிவிடலாம். ஆனால் என்ன! மென்மையாகக் கடியுங்கள். உங்களுக்குள் இருக்கும் மிருகத்தை இந்த இடத்தில் தட்டி எழுப்பிடாதீர்கள்.

தயவுசெய்து கட்டிலில் படுக்கச் செல்லும்போது குத்தும்படியான நகைகளை அணியாதீர்கள். அது மகிழ்ச்சியாக இருக்கும்போது ஆங்காங்கே உரசினால் இருவருக்குமே எரிச்சல் உண்டாகும்.

வித்தியாசமான பொசிசன்களை முயற்சி செய்தால் உங்களுடைய பாதுகாப்பு அவசியம். வெறும் தரையிலோ அல்லது சொரசொரப்பான இடத்திலோ, கட்டிலின் முனைப்பகுதிகளிலோ மிக கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சி வேகத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு பின்பு வலியால் அவதிப்படுவீர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொதிக்கும் எண்ணெய்யை வாடிக்கையாளர் மீது ஊற்றிய கொடுர ஊழியர்..!! (வீடியோ)
Next post கருவளையம் வராமல் தடுப்பது எப்படி?..!!