ஆபாச படத்தை நீக்க கோரி போலீசில் அனுயா புகார்..!!

Read Time:2 Minute, 3 Second

கடந்த சில மாதங்களுக்கு முன் திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுசித்ரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை வி‌ஷமிகள் சிலர் முடக்கி அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர் என்று இதுகுறித்து விளக்கம் அளித்தார். சைபர் க்ரைம் போலீசில் பரபரப்பு புகாரையும் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

‘சிவா மனசுல சக்தி’, ‘நண்பன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படமும் பரவியது. இந்நிலையில் டிவிட்டரில் இருந்து ஆபாச படத்தை நீக்குமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து நடிகை அனுயா, பாந்திராவில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், சமூகவலை தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே அந்த ஆபாச படத்தை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிஉள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே விசாரணையை தொடங்கிவிட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐபோனிற்காக பெண் அரங்கேற்றிய அசிங்கம்… இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?..!!
Next post எலும்புகளைக் காப்பது எப்படி?..!!