உணவுக்கு முன் தேங்காய்: என்ன நடக்கும் தெரியுமா?..!!

Read Time:3 Minute, 3 Second

நம் உடலில் ஏற்படும் ஒவ்வொரு உபாதைகளுக்கும் இயற்கையில் பல தீர்வுகள் உள்ளது. அதில் சில பிரச்சனைகளுக்கான எளிய தீர்வுகள் இதோ,

நன்மைகள்

வாயில் புண் உள்ளவர்கள் தேங்காய்த் துண்டுகளை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் விரைவில் ஆறும்.

ரத்தம் குறைவாக உள்ளவர்கள் கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் ஆகியவை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

மாதவிலக்கு பிரச்சனை உள்ளவர்கள் கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சனை விரைவில் குணமாகும்.

கீழாநெல்லி, கரிசாலை ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

வெண்டைக்காய் விதைகளை பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி 3 நாள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் சரியாகும்.

கொழுப்பு உணவு சாப்பிடுவதற்கும் 30 நிமிடத்திற்கு முன் தினசரி 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாது.

ஜாதிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி நெய் விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். அதோடு சீதபேதி உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம்.

உடம்பு வலி உள்ளவர்கள் நீரில் ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் கலந்து வடிகட்டி கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்க்க வேண்டும்.

துளசி இலைகளை ஒரு டம்ளரில் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளையின் வலிமை அதிகரிக்கும்.

தொண்டையில் புண், வலி உள்ளவர்கள் மிளகை தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் குணமாகும்.

அஜீரணம் மற்றும் மந்தம் பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாவின் கொழுந்து இலைகளை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளைகள் குடித்து வந்தால் சரியாகும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படும் ரகுல் ப்ரீத் சிங்..!!
Next post பெண் கால்களிலிருந்து தானாக வெளியேறும் ஊசிகள்: தவிக்கும் அவலம்..!!