ஜேர்மனியில் சர்ச்சையை கிளப்பிய புதிய மைதானம்: வைரல் வீடியோ ..!!

Read Time:2 Minute, 44 Second

ஜேர்மனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் உள்ள ஒரு விளையாட்டு பகுதியின் அமைப்பு இஸ்லாமிய மசூதி முறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஜேர்மனியின் பெர்லினில் உள்ள neukolln நகராட்சியில் அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற பெயரில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது

மைதானமானது €220,000 செலவில் கட்டப்பட்டுள்ளது.இதில் அமைந்துள்ள சிறுவர்கள் விளையாடும் பகுதி மரத்தால் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் வடிவம் மசூதி மற்றும் அதில் இருக்கும் பிறையை போன்று உள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.அதாவது பொதுவான மைதானத்தில் குறிப்பிட்ட மதம் குறித்து வடிவம் உள்ளதாக கூறுகிறார்கள்.

சாதாரண வடிவம் தான் எனவும் பலர் கூறி வருகிறார்கள்.டுவிட்டரில் இது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. மைதானம் இருக்கும் பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், மைதானமானது பொதுமக்களின் வரி பணத்தில் கட்டப்பட்டுள்ளது.அப்படியிருக்க ஒரு மதத்தை குறிப்பிடும் வடிவங்கள் அதில் இருக்கக்கூடாது என கூறியுள்ளார்.

இன்னொருவர் கூறுகையில், இந்த பகுதியில் பல இஸ்லாமிய சிறுவர்கள் வாழ்கிறார்கள். அப்படியிருக்கையில் ஏன் இந்த வடிவில் வைக்கக்கூடாது? சமுதாயத்தை ஒருங்கிணைக்க இதை செய்வதில் தவறில்லை என கூறியுள்ளார்.பல வரலாற்று கட்டிடங்களை உதாரணமாக வைத்து பல புதிய கட்டிடங்கள் ஜேர்மனியில் உள்ளது எனவும் சிலர் கூறுகிறார்கள்.

இது ஒரு தேவையில்லாத அபத்தமான விவாதம் என neukolln மேயர் Franziska Giffey கூறியுள்ளார்.

அலிபாபாவும் 40 திருடர்கள் என்ற பெரியல் மைதானம் அமைக்கப்பட்டுள்ளதால் அதற்கான நிஜ வடிவிலேயே குறித்த பகுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரசிகர்கள் மனதில் இடம் கிடைத்தது மகிழ்ச்சி: ஐஸ்வர்யா ராஜேஷ்..!!
Next post தீபிகா படுகோனே படத்துக்கு தடை விதிக்ககோரி கலெக்டரிடம் மனு..!!