கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள்..!!

Read Time:2 Minute, 27 Second

கத்தரிக்காய் வெள்ளை, ஊதா, பச்சை நிறங்களில் காணப்படுகின்றது. இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று.

கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது, தக்காளிக்கு இணையான இக்காய், தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் உள்ளன.

விட்டமின் ‘ஏ’யும், விட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன, இவற்றை ஈடுசெய்யும் வகையில் விட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதனால் நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள விட்டமின் ‘பி’ பயன்படுகிறது.

பசியின்மையை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.

முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும், காரணம் இவற்றில் விட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால் அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும்.

கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே மழை நேரத்தில் கூட இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.

கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக் குறைக்கும்.

உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினிக்கு பிறகு சூர்யா தான், வசூல் சாதனை ஒரு காலத்தில்..!!
Next post திருவள்ளுவருக்கு அப்புறம் அதிக குரல் இயற்றியது இவராகத் தான் இருக்கும்! கட்டாயம் படியுங்கள்..!! ( வீடியோ)