களத்தூர் கிராமத்தை பாராட்டிய வெற்றிமாறன்..!!

Read Time:3 Minute, 40 Second

நல்ல படங்களை எப்போதும் தமிழ்சினிமா ரசிகர்க​ளும், ஆர்வலர்களும்​ ஆதரித்தும் பாராட்டியும் வருகின்றனர். அந்தவகையில் ‘களத்தூர் கிராமம்’ படம் பார்த்தவர்கள், நல்ல படம் என்று பாராட்டியும், பத்திரிகைகள் மற்றும் பிரபலங்கள் சிறந்த கதைக்களம், கச்சிதமான திரைக்கதை, வாழ்வியல் பதிவு என பாராட்டியும் வருகின்றனர்.

அடக்குமுறையின் மற்றொரு முகத்தை காட்டியிருக்கிறது களத்தூர் கிராமம்​ என இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டியுள்ளார்.​

இதுகுறித்து தயாரிப்பாளர் சீனுராஜ் கூறியதாவது, “இந்த ‘களத்தூர் கிராமம்’ படத்தை பொ​ரு​த்தவரை எனக்கு மன நிறைவான படம். இரண்டுமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போனது மிகுந்த மன வருத்தத்தையும் நிறைய பொருட்செலவையும் ஏற்படுத்தியது. முதல்முறை போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போன காரணத்தினாலும், இரண்டாவது முறை ரிலீஸ் தேதி அறிவித்தபோது தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாகவும் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இளைஞன்.. சினிமாவுக்கு புதியவன்.. திரையரங்குகள் உறுதி செய்யும் போராட்டம் போன்றவை மன அழுத்தத்தின் உச்சத்தில் என்னை கொண்டுபோய் நிறுத்தியது. இருந்தாலும் விடாப்படியாக, ஒரு நல்ல படத்தை மக்கள் மத்தியில் சரியாக கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

அக்டோபர்-27ஆம் தேதி படம் 80 திரையரங்குகளில் வெளியானது. இன்று படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கு மன நிறைவை தந்துள்ளது. நல்ல சினிமாவை நேசிக்க​க்​ கூடிய சில திரையரங்க நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது ஆறுதலை​த்​ தந்தது. அவர்களாகவே படத்தை​க்​கேட்டு வாங்கி திரையிட்டார்கள்.

பெரிய நடிகர்கள் நடித்தால் அல்லது பெரிய தயாரிப்பாளர் படம் என்றாலோ, பெரிய இயக்குநர்கள் இருந்தால் மட்டுமே சில பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள். சில நல்ல படங்கள் வரும்போது அதைப் பார்த்துவிட்டு பாராட்டினால் சிறு படங்கள் வெற்றிபெறும். இயக்குநர்​ வெற்றிமாறன் விதிவிலக்காக எங்கள் படம் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இது எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. அவருக்கு நன்றி! என்றார்.

களத்தூர் கிராமம் படத்தில் கிஷோர், யாக்னா ஷெட்டி, ரஜினி மஹாதேவய்யா, சுலீல் குமார், மிதுன்குமார், அஜய்ரத்னம், தீரஜ் ரத்னம் ஆகியோர் நடிப்பிலும், இசைஞானியின் இசை ஆளுமையிலும், இயக்கு​ந​ர் சரண் கே.அத்வைதனின் தெளிவான திரைக்கதை இயக்கத்திலும் உருவாகி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாச படம் பார்க்கபோகிறீர்களா? தென் கொரியாவின் அதிர்ச்சி வீடியோ..!!
Next post இரவில் வெகு நேரம் கண் விழிக்கிறீர்களா?..!!