இந்த ஆசைகளையெல்லாம் பெண்களால் அடக்கவே முடியாதாம்..!!

Read Time:4 Minute, 46 Second

பெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது.

அதிலும் காதலில் சொல்லவா வேண்டும். இந்த உணர்ச்சியின் உச்சத்தினால் தான் சில சமயங்களில் ஆண்கள் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் கூட பெண்களின் மனதை ஆழமாக பாதித்துவிடுகிறது. அதே போல சின்ன, சின்ன விஷயங்களுக்கு கூட பெண்கள் காதலில் அதிகமாக மகிழ்வார்கள்.
இனி, பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் பற்றிக் காணலாம்.

தோளில் சாய்ந்துக் கொள்வது

எத்தனை மணி நேரம் காதலினின் தோளில் சாய்ந்திருந்தாலும் காதலிக்கு போதாது. மேலும், தன் ஆணின் தோள் தனக்கானது என உரிமைக் கொண்டாடுவார்கள். காதலனின் தங்கை தங்கள் கண்முன் அவனது தோளில் சாய்ந்துக் கொண்டால் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

தலை முடியை கோதுவது

பெண்களுக்கு தங்களது முடியை மட்டுமல்ல, தங்கள் காதலனை மடியில் சாய்த்துக் கொண்டது முடியை கோதிவிடுவதும் கூட மிகவும் விரும்பி செய்வார்கள்.

பொத்தான்களை நோண்டுவது

அதே போல பேசிக் கொண்டிருக்கும் போது அவனது சட்டை பொத்தானை நோண்டாமல் பெண்களால் இருக்க முடியாது. சில சமயங்களில் மணிக் கணக்காக கூட நொண்டிக் கொண்டே இருப்பார்கள்.

அழகென கூறுதல்

எத்தனை முறை கூறினாலும், காதலனிடம் “நான் தான் உனக்கு அழகு. நீ என்ன தான் அழகுன்னு சொல்ல வேண்டும்” என நிபந்தனை விடுத்து கூற சொல்வார்கள் பெண்கள்.

யூ ஆர் தி பெஸ்ட்

அதே போல தாங்கள் தங்கள் காதலனுக்கு பெஸ்ட்டாக இருக்க வேண்டும் என பெண்கள் அதிகமாக ஆசைப்படுவார்கள். ஆண்கள் ஒப்புக் கொண்டாலும் கூட அதற்காக மீண்டும், மீண்டும் ஏதேனும் செய்துக் கொண்டே இருப்பார்கள்.

நீதான் என் உலகம்

காதலர்கள் தன்னை அவர்களது உலகமாக கருத வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்கும் இருக்கிறது. அழகுக்கு பிறகு இதையும் அவர்கள் அடிக்கடி கூற வேண்டும் என விரும்புவார்கள். (காசா பணமா.. சொல்லிவிடுங்க பாஸ்)

பேசுதல்

எத்தனை மணிநேரம் பேசினாலும் பெண்களுக்கு போதாது. போன் வைத்த சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பார்கள். குறைந்தபட்சம் குறுஞ்செய்தி அனுப்பியாவது தூக்கத்தை கெடுப்பார்கள்.

ஐ லவ் யூ

பாரதிக்கு செந்தமிழ் பேசும் போது காதில் தேன் பாய்ந்தது. பெண்களுக்கு அவர்களது காதலர்கள் “ஐ லவ் யூ” கூறும் போது தேன் பாயும் போல. ஆயிரம் முறைக் கூறினாலும், மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். (கஜினி சூர்யா போல, சொல்லாம விட்டா மறந்துருவாங்க போல)

புத்தாடைகள்

ஆடை விஷயத்தில் பெண்களை அடித்துக் கொள்ளவே முடியாது. எத்தனை புத்தாடை வாங்கினாலும், மறு மாதமே “என்கிட்டே புது டிரெஸ் இல்லவே இல்ல என அடம்பிடிப்பார்கள்.

நகைகள்

புத்தாடை ஒன்று வாங்கினால் அதற்கு பொருத்தமான, வளையல், கம்மல் என நகைகள் வாங்க வேண்டும். மற்றும் ஏற்கனவே அதே வண்ணத்தில் இருப்பினும், டிசைன் மாறுபடுவதாக கூறி வாங்குவார்கள். இவை எல்லாம் பெண்களால் கட்டுப்படுத்த முடியாத, அடங்காத ஆசைகள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைரலாகும் ஓவியா ஆர்மியின் “விவி”… அப்படினா என்ன அர்த்தம் தெரியுமா?..!!
Next post உடலில் வளரும் தேவையற்ற முடியை நீக்க கோதுமை மாவே போதும்?..!!