பரிஸ் – நிர்வாண பிரியர்களுக்காக திறக்கப்பட உள்ள உணவகம்..!!

Read Time:1 Minute, 34 Second

பரிசில் வரும் வாரத்தில், முதன் முறையாக நிர்வாண பிரியர்களுக்கான உணவகம் ஒன்று திறக்கப்பட உள்ளது.

பரிஸ் வரலாற்றில் முதல் தடவையாக இந்த உணவகம் 12 ஆம் வட்டாரத்தில் வரும் வாரத்துக்குள்ளாக திறக்கப்பட உள்ளது. O’Naturel என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த உணவகம் rue de Gravelle இல் திறக்கப்பட உள்ளது. உணவகத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது எனவும், நிர்வாண பிரியர்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு, செருப்பு மட்டும் அணிந்துகொண்டு தாராளமாக உணவருந்தலாம்!’

என நிர்வாகி தெரிவித்துள்ளார். அதேவேளை, உணவு பரிமாறுபவர்கள், காசாளர்கள், சமையலாளர்கள் அனைவரும் அவசியம் கருதி உடை அணிந்திருப்பார்கள் எனவும், இருக்கைகள் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் விரிக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வாரத்தில் ஒரு நாள் திறக்கப்பட்ட குறித்த உணவகம், தற்போது 7 நாட்களும் திறக்கப்பட உள்ளது. அருகில் Roger Le Gall இல், நிர்வாண பிரியர்களுக்கான நீச்சல் தடாகமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குயீனுக்கா 4 பிரபல நடிகைகள் பிரான்சில் முகாம்..!!
Next post 15 குழந்தைகள் உயிரை காப்பாற்றிய சமந்தா..!!