தல 58 படத்தில் இணையும் முக்கிய பிரபலம்..!!

Read Time:2 Minute, 4 Second

அஜித், சிவா கூட்டணியில் வெளியான ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்கள் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் அடுத்ததாக வெளியான ‘விவேகம்’ படம் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும், ரசிகர்களிடமும், வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே யுவன் ஷங்கர் ராஜா, அஜித்தின் பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அந்த படத்தில் உள்ள பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களுக்கு எப்போதும் விருந்தளிக்கும் விதமாக இருக்கும்.

அந்த வகையில் இந்த கூட்டணி மீண்டும் இணையவிருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகள் முதலைகளுடன் விளையாடுவதற்கு தடை: ஜேர்மன் நீதிமன்றம் உத்தரவு..!! (வீடியோ)
Next post பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் திராட்சை..!!