சொந்த தம்பியுடன் உறவு வைக்க வற்புறுத்திய கணவன்.. அருவருக்க வைக்கும் காரணம்..!!

Read Time:2 Minute, 43 Second

தென்கிழக்கு டெல்லி பகுதியில் ஜெய்தபூரில் ஒரு வீட்டில் தன் கணவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கடந்த 25-ஆம் தேதி ஒரு பெண் புகார் செய்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்துள்ளனர்.

அப்போது அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தனது வீட்டுக்கு கணவரின் நண்பர்கள் இருவர் வந்ததாகவும், அவர்களும் தனது கணவரும் ஒரு அறையில் உறங்கியதாகவும் மறுநாள் பார்த்தபோது கணவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் நன்கு ஆராய்ந்து பார்த்ததில் இறந்து கிடந்த நபர் புகார் அளித்த பெண்ணின் கணவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் பொலிசில் சந்தேகம் பெண்ணின் பக்கம் திரும்பியது. அவரை கைது செய்து விசாரித்த போது பல்வேறு அருவருப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் ஆனது. தனது தொழிலை கவனித்து கொள்ள ஆண் வாரிசு வேண்டும் என்று கூறி வந்தார் கணவர். இதற்காக பலமுறை கருக்கலைப்பு செய்த அப்பெண்ணிற்கு 2010-ம் ஆண்டில் பெண்குழந்தை பிறந்து, அக்குழந்தையும் நான்கு வருடத்தில் இறந்துள்ளது.

அதன்பின்பு தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என்ற வெறியில் உனது தம்பியுடன் உறவு வைத்து பிள்ளை பெற்று கொடு என்று கணவன் வற்புறுத்தியுள்ளார். அதுவும் எனது கண்முன்னே உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிடில் நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி விடுவதாகவும் கணவர் மிரட்டியுள்ளார்.

கடந்த ஓராண்டு பொறுமை காத்து வந்த அப்பெண் நாளுக்கு நாள் கணவனின் அராஜகம் பெருகிவிட்டதால் சம்பவத்தன்று தூக்க மருந்து கொடுத்து தானும் தனது தம்பியும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். தற்போது பொலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அருவி வெளியாகும் தேதி அறிவிப்பு..!!
Next post இளம் நடிகர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!!