கார்த்தியுடன் மோதும் 4 வடமாநில வில்லன்கள்..!!

Read Time:2 Minute, 31 Second

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் `தீரன் அதிகாரம் ஒன்று’.

கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை `சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கியிருக்கிறார். இவர்களுடன் அபிமன்யு சிங், போஸ் வெங்கட், ஸ்கார்லெட் மெல்லிஸ் வில்சன், மேத்யூ வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் பாடல்கள் நேற்று வெளியாகி இருக்கின்றன.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் கூறுகையில்,

இது போலீஸ் கதை என்றாலும் வழக்கமான போலீஸ் கதையாக இருக்காது. யதார்த்தமாக ஒரு போலீஸ் அதிகாரி சந்திக்கும் பிரச்சினைகளை வைத்தே படம் உருவாகி இருக்கிறது. கார்த்தி சக மனிதரைப் போல் வாழும் ஒரு போலீஸாகவே வாழ்ந்திருப்பார்.

கார்த்தி ஒரு விசாரணைக்காக வட மாநிலங்களுக்கு செல்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பிரச்சினையை சந்திக்கிறார். இந்த படத்தில் 4 வட மாநிலத்தைச் சேர்ந்த வில்லன்கள் நடித்திருக்கிறார்கள். மும்பையில் ஜாமீன்கா, மராட்டியத்தில் கிஷோர்கதம், போஜ்புரியைச் சேர்ந்த ஜோகித் பதக், குஜராத்தைச் சேர்ந்த அபிமான் சிங் ஆகியோர் கார்த்தியுடன் மோதும் வில்லன்கள்.

படத்தின் டிரெய்லரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் நிலையில், தணிக்கை குழுவில் இப்படம் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது.

படம் வருகிற நவம்பர் 17-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட்டப் பகலில் நடு வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தலைவர்: பதற வைக்கும் வீடியோ..!!
Next post உருளைக்கிழங்கின் தோலை உரிக்காமல் சாப்பிட்டால் நல்லதா?..!!