‘மெர்சல்’ வெற்றி: படக்குழுவுக்கு விருந்து வழங்கிய விஜய்..!!

Read Time:1 Minute, 57 Second

விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து தீபாவளி தினத்தில் திரைக்கு வந்தது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருகாகிய இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் கிளம்பியதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இவ்வாறாக அனைத்து தடைகளையும் தாண்டி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரூ.130 கோடி செலவில் உருவாகிய இப்படம் தற்போது வரை ரூ.210 கோடிகளை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுவதால், வசூல் மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி’ விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், நடிகர் விஜய் ‘மெர்சல்’ படக்குழுவினருக்கு விருந்து ஒன்றை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள விஜய் வீட்டில் நடைபெற்ற இந்த விருந்தில், அட்லி, ஏ.ஆர்.ரஹஹ்மான், எஸ்.ஜே.சூர்யா, பாடலாசிரியர் விவேக், எடிட்டர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மயங்கி விழுந்த ரசிகரின் உயிரை தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய பிரபல நடிகை… அவர் யார் தெரியுமா?..!!
Next post குழம்பிப் போயுள்ள வடக்கு அரசியல்..!! (கட்டுரை)