ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையர் உட்பட மூவருக்கு 10ஆண்டுச் சிறை

Read Time:2 Minute, 27 Second

இலங்கைக்கு ஹெரோயின் கடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்தவர் உட்பட 3பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டணை மற்றும் 3 இலட்சம் ரூபா அபராதம் விதித்து மதுரை நீதிமன்றம் தீர்பளித்தது என தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது கொழும்பு நகரைச் சேர்ந்த முஹம்மது ரவுஷ்தீன்(வயது48) இவரது மனைவி பாத்திமா ரக்ஷானா (வயது40) இருவரும் போதை பொருள் கடத்துபவர்கள் சென்னை வந்த இவர்கள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்துல் பாரி(வயது45) மூலமாக 4கிலோ 270 கிராம் ஹெரோயிணை தூத்துக்குடி கார்கோ மேஸ்திரி அசோக் பெர்ணான்டோவுக்கு (வயது38) அனுப்பினர் இதுகுறித்து தகவலறிந்த சென்னை போதைப்பொருள் கட்டுபாட்டுமைய நுண்ணறிவுப் பிரிவினர் தூத்துக்குடி சென்று அசோக் பெர்ணான்டோ மற்றும் அப்துல் பாரியை கைது செய்தனர் பின்னர் அவர்களிடமிருந்து ரூபா 4கோடி மதிப்புள்ள ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரி;ல் சென்னையில் தங்கியிருந்த ரவ்ஷ்தீனும், அவரது மனைவி ரக்ஷானாவும் கைது செய்யப்பட்டனர் இந்த வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்புச்சட்டத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்த விசாரணையின் போது ரக்ஷானா மட்டும் தலைமறைவாகி விட்டார். எஞ்சிய 3 பேர் மீதான வழக்கில் நேற்றுமுன்தினம் தீப்பளிக்கப்பட்டது. 3பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும் 3லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது அபராதத்தொகை கட்டத் தவறினால் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டணை அனுபவிக்கவும் நீதிபதி உதயம் உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜாங்கன யாயப்பகுதியிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளை
Next post திரையில் புகைப்பது போல் தோன்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது – நடிகர் சங்கம்