அழகை கெடுக்கும் இந்த கரும்புள்ளிகளை போக்குவது எப்படி? சூப்பர் டிப்ஸ்..!!
கரும்புள்ளிகள் முகத்தில் இருப்பது முகத்தின் அழகையே கெடுத்து விடுகிறது. முகப்பருக்களை கிள்ளுவதால் இந்த கரும்புள்ளிகள் வருகின்றன. க்ரீம்கள் இதனை போக்க உதவினாலும், ஒரு சிலருக்கு க்ரீம்கள் சரியாக வராது. ஒவ்வாமையை உண்டாக்கலாம். அதுமட்டுமின்றி அதிகளவு க்ரீம்களை முகத்திற்கு பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. இந்த பகுதியில் இயற்கை பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவது என்பது பற்றி காணலாம்.
1. உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.
2. வெந்தய கீரை
வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும். கொத்துமல்லி மற்றும் மஞ்சள் கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.
3. தயிருடன் எலுமிச்சை
இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.
4. சர்க்கரை மற்றும் எலுமிச்சை
எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.
5. வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கய வைத்து பின்பு கழுவ வேண்டும். இதில் உள்ள பிளிச்சீங் தன்மை முகத்தில் உள்ள கருமைகளை மறைக்கிறது.
6. எலுமிச்சை தேன்
வெயிலில் சுற்றி திரிவதனால் உங்கள் முகம் கருப்பாகி விட்டதா அதை வெள்ளையாக்க எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து கழுவினால் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் மிருதுவாகும்.
7. பால், சந்தனம்
பால் மற்றும் சந்தனத்தை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். வாரத்தில் மூன்று முறை செய்தால் போதுமானது.
8. முல்தானி மெட்டி
முல்தானி மெட்டியை ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் தழும்புகள் மறையும்.
9. கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் சிறிது லாவண்டர் எண்ணெய் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் மறைய தோன்றும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating