கணவனுக்கு வைத்த குறி! பதினேழு பேர் மரணம்.. குழப்பத்தில் பொலிஸார்?..!!

Read Time:1 Minute, 51 Second

விருப்பத்துக்கு மாறாக மணமுடித்து வைக்கப்பட்டதால் கோபம் கொண்ட இளம் புதுமணப் பெண், பதினேழு பேருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மானிலத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணுக்கு செப்டம்பர் மாதம் திருமணமாயிற்று. அவர் ஏற்கனவே காதல் வயப்பட்டிருந்தார். தனது விருப்பத்துக்கு மாறாக குடும்பத்தினர் திருமணம் முடித்து வைத்ததில் அவர் கடும் கோபத்தில் இருந்தார்.

இந்த நிலையில், தனது கணவரைக் கொலை செய்வதற்காக, அவருக்குக் கொடுக்கப்படவிருந்த பாலில் அப்பெண் நஞ்சைக் கலந்தார். எனினும், நஞ்சூட்டப்பட்ட அந்தப் பால் எப்படியோ குடும்பத்தின் ஏனையவருக்கும் வழங்கப்பட்டது. இதனால் மணமகன் உட்பட அவரது உறவினர்கள் பதினேழு பேர் மரணமாயினர்.

இவ்விவகாரம் குறித்து ஆராய்ந்த பொலிஸார், குறித்த பெண்ணை விசாரணை செய்தனர். அதில், அப்பெண்ணும் அவரது காதலரும் சேர்ந்தே கணவனைக் கொல்லத் திட்டமிட்டதாகவும், அது தவறுதலாக மற்றவர்களுக்கும் எமனாகிவிட்டது தெரியவந்துள்ளது.

பெண்ணையும் அவரது காதலரையும் கைதுசெய்துவிட்டபோதும், இவ்விவகாரத்தில் எவ்வாறான முடிவு எடுப்பது என்று பொலிஸார் குழம்பிப் போயிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வசூலில் புதிய சாதனை படைத்த மோகன்லால் – விஷாலின் `வில்லன்’..!!
Next post அடுத்து ஒரு படம்! மேயாத மான் பிரியா பவானிக்கு இன்னொரு ஆஃபர்..!!