வன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும்… -பாரதி
வன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அம்பாறையில் இருந்த வன்னிப்புலிகளின் தளங்களை அழித்தது -பாரதி கருணாஅம்மான் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் (ரிஎம்விபி) முக்கியதளபதிகளில் ஒருவரான பாரதியின் நேர்காணலில் இருந்து….
(கருணாஅம்மான் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் (ரிஎம்விபி) முக்கியதளபதிகளில் ஒருவரான பாரதி என்று எல்லோரினாலும் அழைக்கப்படும் இனியபாரதியிடம் “அதிரடி”யின் அம்பாறை மாவட்ட செய்தியாளரினால் நேரடியாக எடுக்கப்பட்ட நேர்காணலில் இருந்து….)
கேள்வி:- இலங்கையில் தற்பொழுது அரசபடையினரும் வன்னிப்புலியினரும் யுத்தநிறுத்தத்தை மிகவும் உன்னிப்பாக பாதுகாத்துக் கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றார்கள் இதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
இலங்கையில் யுத்தநிறுத்தம் என்பது 2002ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது ஆனால் அதை வன்னிப்புலிகள் தமது பேச்சளவில் தான் ஏற்று நடந்து வருகின்றார்கள். அந்த பேச்சுவார்த்தையினால் தமக்கு ஏதும் ஒரு நன்மை கிடைக்குமா? என்றுதான் புலிகள் எண்ணி வந்துள்ளார்கள் இதைப்பற்றி நான் மட்டும் கூறவில்லை கடந்தகாலங்களில் பல ஊடகங்களும் மற்றும் பத்திரிகைகளும் தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கின்றது. மக்களுக்கும் தெளிவாகத் தெரியும்.
கேள்வி: வன்னிப்புலிகள் தமது பாதுகாப்பிற்காகவேதான் இராணுவத்தினர் மீது தாக்குதல்களை நடத்துகின்றோம் என்று கூறுகின்றார்களே அதை மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்களா?
வன்னிப்புலிகள் எப்பொழுது மக்களை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணியவர்கள்? நாங்கள் அவர்களுடன் தானே இருந்தோம். என்ன அவர்களைப் பற்றி எமக்குத் தெரியாதா என்ன? எமது தலைவர் கருணாஅம்மானும் பிரபாகரனும் இந்த விடயமாக எத்தனையோமுறை முரண்பட்டவர்கள் என்பது வெளியில் தெரியாத உண்மையாகும்.
ஆகவே வன்னிப்புலிகள் கள்ள எண்ணத்தில் தான் இராணுவத்தை வலிந்து தாக்கி வருகின்றார்கள் அவர்கள் எப்பொழுதும் பேச்சளவில் தான் யுத்தநிறுத்தம் குறித்து சொல்கின்றார்கள் அதேவேளை இராணுவத்தை கிழக்கிலும் வடக்கிலும் இருந்து முற்றாக கலைத்து விடுவோம் என்று மக்களை நம்ப வைத்திருக்கின்றார்கள்.
ஆனால் அண்மைக்கால வன்னிப்புலிகளின் படுதோல்விகளினால் பெரும்பகுதியான மக்கள் வன்னிப்புலிகளின் பேச்சையும் செயலையும் தற்பொழுது மதிப்பதே கிடையாது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
கேள்வி: நீங்கள் ஆரம்பத்தில் கூறினீர்கள் வன்னிப்புலிகள் இராணுவத்தை வலிந்து தாக்குவதாக ஆனால் இராணுவம் தான் பலதடவைகள் வான்வெளிகளினால் தாக்கியிருக்கின்றார்களே இதுபற்றிய உங்கள் கருத்து என்ன?
ஆம்… இராணுவத்தின் முப்படையணிகளும் வன்னிப்புலிகளைத் தாக்கியது உண்மைதான், அதைநான் ஒருபொழுதும் மறுக்க மாட்டேன். ஆனால் வன்னிப்புலிகள் முதலில் இடையிடையே தாக்குதல்களை நடத்திவிட்டு அமைதியாகி விடுவார்கள். கோபம் கொண்டு முப்படை இராணுவமும்; தொடர்ந்து தாக்குவார்கள் அப்பொழுது வன்னிப்புலிகள் மக்களுக்கும் சர்வதேவத்திற்கும் எடுத்துக் கூறுவது மக்களை இராணுவம் பலவழிகளில் துன்புறுத்துகின்றார்கள் என்று. ஆனால் வன்னிப்புலிகளின் இந்த சூழ்ச்சியானது பெருமளவில் கைகொடுக்கவில்லை. தற்போது சர்வதேசம் மட்டுமில்லை தமிழ்மக்களும் சரியாகப் புரிந்து விட்டார்கள் வன்னிப்புலிகளை, என்பதை எம்மால் உறுதியாக கூறமுடியும்.
கேள்வி: வன்னிப்புலிகள் யுத்தபாதுகாப்பு விதிகளை கைக்கொள்ளவில்லை என்கிறீர்கள் ஆனால் நீங்களும் அவர்களைப் போல் தானே நடக்கின்றீர்கள். தற்பொழுது கூட அம்பாறையில் இருந்த வன்னிப்புலிகளின் தளங்களை அழித்துள்ளீர்களே இதுபற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?
மக்கள் இப்பொழுது மிகவும் தெளிவாகத்தான் இருக்கின்றார்கள். நாங்கள் வன்னிப்புலிகளைப் போல் மக்களைக் கவனத்தில் கொள்ளாத நிலைப்பாடுகளை முன்வைக்கவில்லை. வன்னிப்புலிகளுக்கும் எமது தலைவருக்கும் இடையில் இப்படியான முரண்பாடுகள் இருந்ததால் தான் நாங்கள் வன்னிப்புலிகளை விட்டு வெளியேறினோம்.
இன்று எத்தனையோ பிரச்சினைகள் மத்தியிலும் மக்களுக்காகத் தான் நிற்கின்றோம். வன்னிப்புலிகள் எம்மீது பலதடவைகள் அத்துமீறி தாக்குதல்களை நடத்தியவர்கள் ஆனால் நாங்கள் முதலில் அமைதியாகவே இருந்தோம் மக்களைப் பாதுகாக்கவே தான் ‘ரிஎம்விபி”யினராகிய நாம் என்பதை எமது மக்கள் நன்கு அறிவார்கள.
வன்னிப்புலிகள் தொடர்ந்து தாக்கும் பொழுது நாங்கள் மக்களின் நன்மைகருதி மௌனம் காத்ததினால் எம்மிடம் பலம் இல்லை என்ற எண்ணம் வன்னிப்புலிகளுக்கு ஏற்பட்டு விட்டது. இதனால் வன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அம்பாறைப் பகுதிகளுக்குள் இருக்கும் வன்னிப்புலிகளின் தளங்களை எல்லாம் அழித்து வன்னிப்புலிகளை அவ்விடத்தை விட்டு விரட்டினோம் ஆனால் அந்த தளங்கள் யாவும் காட்டுப் பிரதேசங்களை ஒட்டியே இருந்தவை எமது தாக்குதலால் மக்கள் சேதம் அடையவில்லை என்பதும்; மக்கள் அறிவார்கள்.
கேள்வி: மேற்படி தாக்குதல் யாரால் திட்டமிட்டு வழிநடத்தப்பட்டது??
மேற்படி அம்பாறை மாவட்டத்தில் உள்ள வன்னிப்புலிகளின் பிரதான தளமான செவன்திறீபேஸ் முகாம் உட்பட கஞ்சிக்குடியாறுமுகாம் பாவட்டாமுகாம் ரூபேஸ்முகாம் ஆகிய நான்கு முகாம்களையும் ஒரேநேரத்தில் தாக்கியழிக்கும் அதேவேளை எமதுதரப்பில் எதுவித சேமுமின்றி தாக்குதலை நடாத்தத் திட்டமிட்டவர் தலைவர் கருணாஅம்மான்.
—அம்பாறைத் தாக்குதலுக்கு முன்னர் மூத்ததளபதி nஐயம் கட்டளைத்தளபதி பிள்ளையான் ஆகியோர் தமது தலைவர் கருணாஅம்மான் அவர்களின் திட்டத்தை ‘ரிஎம்விபி” போராளிகளுக்கு விளக்கிய போது…
இத்தாக்குதலை வழிநடாத்தியவர்கள் கட்டளைத்தளபதி பிள்ளையான் மூத்ததளபதி nஐயம்அண்ணர் இராணுவத்தளபதி மார்க்கன் போன்றவர்கள.்
தாக்குதலுக்கான படையணிகளை தலைமை தாங்கிச் சென்றவர்கள் ரீஐசீலன், சிந்துஐன், அஐpத், வீரா, மலரவன் போன்ற பலர்.
மேற்படி தாக்குதல்களின் வெற்றிக்கு மூலகாரணம் தீரமுடன் போராடிய எமது (ரிஎம்விபி) போராளிகள் மட்டுமல்ல என்றும் எமக்குப் பக்கதுணையாக இருந்து பலவழிகளிலும் உதவிபுரியும் எமது மக்களும் தான்.
இதேவேளை மேற்படி தாக்குதல் நடவடிக்கையின் போது மக்களுக்காக மரணித்த நண்பர் அன்பரசனுக்கும் இவ்வேளையில் அதிரடி இணையத்தளத்தின் ஊடாக ரிஎம்விபி சார்பாக அஞ்சலி செலுத்துகின்றோம்.
தலைவர் கருணாஅம்மான்
கட்டளைத்தளபதி பிள்ளையான்
மூத்ததளபதி nஐயம்
கேள்வி: அம்பாறையின் காட்டுப்பகுதிகளில் புலிகளின் தளங்கள் அழிக்கப்பட்ட பொழுது அங்கிருந்து தப்பி ஓடியவர்களை நீங்கள் என்ன செய்தீர்கள்.? எப்படி உறுதியாகக் கூறுகின்றீர்கள் புலிகள் அம்பாறைமாவட்ட குறிப்பிட்ட பிரதேசங்களில் இல்லை என்று?
அம்பாறைமாவட்ட குறிப்பிட்ட பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளில் இருக்கும் வன்னிப்புலிகளின் தளங்கள் அழிக்கப்பட்ட பொழுது மேலும் தப்பி ஓடியவர்களை நாங்கள் துரத்திச் சென்று தாக்கினோம். சுமார் 24மணித்தியாலத்திற்கும் மேலாக அப்பிரதேசங்களை எமது பூரணகட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். பின்னர் மேற்படி தளங்களை அழித்துவிட்டே தளம் திரும்பினோம்.
–அம்பாறைத் தாக்குதல் மூலம் வன்னிப்புலிகளின் முகாம்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் செவன்திறீபேஸ் முகாம் பகுதியில் ‘ரிஎம்விபி” போராளிகள் முக்கியஸ்தர்களுடன் பாரதி -வாக்கியுடன்-
கேள்வி: தப்பிச்சென்ற வன்னிப்புலிகள் மீண்டும் அங்கு திரும்பி வரமாட்டார்களா??
தற்போதுவரை அப்பிரதேசங்களுக்கு வன்னிப்புலிகள் திரும்பி வரவில்லை என்பது உறுதி. அதேவேளை ஒட்டுமொத்தத்தில் சென்று விட்டார்கள் என்று நாங்கள் நம்பப் போவதில்லை அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதுதான் எமது எண்ணம். நாங்கள் எப்பொழுதும் எதிரியை குறைவாக எடைபோடுவதில்லை
கேள்வி: அப்படியாயின் ஏன் அப்பிரதேசத்தை விட்டுவிட்டு தளம் திரும்பினீர்கள்?
அப்பிரதேசமானது முற்றிலும் மக்கள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதி. நாம் மக்களுக்காக மக்களுடன் இருந்துதான் செயலாற்ற விரும்புகிறோமே தவிர வன்னிப்புலிகளைப் போல் மக்களைக் கவனத்தில் கொள்ளாது மக்களிடமிருந்து அந்நியப்பட்டு காடுகளுக்குள்ளும் அன்றில் பிரபாகரனைப் போல் பங்கருகளுக்குள் இருந்தும் செயற்பட விரும்பவில்லை.
கேள்வி: வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.
நாங்கள் என்ன புதிதாகச் சொல்ல இருக்கின்றது மக்கள் தானே இன்று எமது பக்கம் இருக்கின்றார்கள். பலஊடகங்கள் வன்னிப்புலிகளுக்கு சாதகமாகவே தான் செல்ல வேண்டிய இக்கட்டான நிலைகள் இருந்தும் “அதிரடி” போன்ற மாற்று ஊடகங்கள் மக்களைப் பற்றி சிந்திக்கின்றதே அதைப்பற்றி மக்களும் சிந்தித்தால் நல்லது. அதுவும் வெளிநாடுகளில் இருக்கும் மக்கள் தொலைபேசிகளினால் தொடரும் தகவல்கள் எத்தனை? அவற்றை எல்லாம் வன்னிப்புலி சார்பு ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து இருக்கின்றன என்பது மக்களுக்குத் தெரியாதா என்ன?
இதேவேளை நான் முன்பு மேற்படி “அதிரடி” இணையத்தளம் ஊடாகக் குறிப்பிட்டதை போல் ‘ரிஎம்விபி”யினராகிய எங்களது எதிர்காலமானது மக்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் எம்மக்களை ஜனநாயக பாதைக்கு கொணடு செல்வது. எம்மக்களுக்காக இனிவரும் காலங்களில் நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கை நடைமுறைகளையும் மற்றும் கல்வி மருத்துவம் தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சிகளில் எம்மக்கள் பின்தங்கியவர்கள் இல்லை என்பதை எமது தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு மிகவிரைவில் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தும் என்பதை மீண்டுமொருமுறை தெரிவிக்க விரும்புகிறோம். நன்றி.
*************************************
மேற்படி பேட்டி சம்பந்தமான உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் அதிரடியின் மின்னஞ்சலுக்கு எழுதியனுப்பவும்… [email protected]
**************************************
Thanks…..WWW.ATHIRADY.COM