உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத வருமானம் இதுதான்..!!
முகேஷ் திருபாய் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரர். உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர் நிர்வகித்து வரும் ரிலையன்ஸ் நிறுவனம் சர்வதேசளவில் கவனம் பெற்றது.இவரது மனைவி நீட்டா அம்பானியும் இந்தியாவில் பிரபலமான பெண் தொழிலதிபர். விளையாட்டு துறை சார்ந்த நடவடிக்கைகளில் நீட்டா அம்பானியின் பங்கு மிகப்பெரியது.உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் முகேஷ் அம்பானியின் வாழ்க்கை ஆடம்பரத்தின் உச்சம்.
ஆனால் அந்த ஆடம்பரத்தை முகேஷ் அம்பானி பொது விழாக்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம் அவரிடம் பார்க்க முடியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் முகேஷ் அம்பானி ஆடம்பரங்களின் அரசன்.தென் மும்பை பகுதியில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அன்டிலியா என்ற பிரம்மாண்ட வீடு, உலகளவில் இருக்கும் ஆடம்பரமான கட்டிடங்களில் ஒன்று.
மும்பையின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த வீடு, தற்போது இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக மாறி வருகிறது.மொத்தம் 27 அடுக்குகள் கொண்ட முகேஷ் அம்பானியின் அன்டிலியா கட்டிடத்தில் சுமார் 6 தளங்கள் மட்டும் கார்களை நிறுத்துவதற்காகவே கட்டபட்டுள்ளது.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் இந்த கார்கள், உலகின் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர மாடல்களாகும்.வெறும் கார்களை பார்க்கிங் செய்யப்படும் தளங்களாக மட்டுமில்லாமல், அதற்கான மொத்த மெக்கானிசத்தையும் அன்டிலியா வீட்டின் அந்த 6 தளங்கள் பெற்றுள்ளன.
இங்கு முகேஷ் அம்பானி மட்டுமில்லை, அவரிடம் பணிப்புரியும் கார் ஓட்டுநர்கள் கூட நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர்கள் தான்.அதாவது எம்பிஏ படித்துவிட்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் சம்பாதிக்கும் ஊழியர்களை விட,முகேஷ் அம்பானியின் கார் ஓட்டுநர்கள் வாங்கும் ஊதியம் மிக அதிகம்.
அதாவது மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் ஓட்டுநர்கள் வரை முகேஷ் அம்பானியிடம் பணிபுரிகிறார்கள். அதிலும் குறிப்பாக அவரது பிரத்யேக கார் ஓட்டுநருக்கு மற்றவர்களை விட அதிக ஊதியம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.கார் ஓட்டுநர்களுக்கா இவ்வளவு ஊதியம் என நம்மில் பலருக்கு ஆதாங்கம் எழலாம். ஆனால் முகேஷ் அம்பானி வைத்திருக்கும் கார்களை ஓட்டுவது அவ்வளவு சுலபமான காரியமில்லை.
முகேஷ் அம்பானி வீட்டில் இருக்கும் கார்கள் பலவும் அதிக விலையுயர்ந்த மற்றும் நுணுக்கமான வேலைபாடுகளை கொண்ட தயாரிப்புகள்.அவற்றில் ஏதாவது ஒரு கோளாறு ஓட்டுநரால் ஏற்படால், அதை சரிப்படுத்த லட்சம் லட்சமாக கொட்ட வேண்டும். குறிப்பாக ஒரு சில கார்களில் கோளாறு அல்லது கீறலோ விழுந்தால் கூட அது சரி செய்ய முடியாமல் கூட போகலாம்.முகேஷ் அம்பானி மட்டுமில்லாமல், அவரது காரின் உயிரும் அதன் ஓட்டுநரின் கையில் தான் என்றால், அதற்கு ஏற்றவாறு ஊதியமும் இருக்க வேண்டாமா?
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating