முட்டையை பிரிட்ஜில் வைப்பது கெடுதல் தரும்..!!
நாம் வாங்கும் முட்டையை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, பிரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமாம். அதிலும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அது பாலைப்போல் திரிந்துவிடுகிறதாம்.
ஐரோப்பிய முட்டை மார்க்கெட்டிங் ஒழுங்குவிதிகளின் படி, முட்டையை மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரித்து, பின் அறைவெப்ப நிலைக்கு கொண்டு வரும் போது, முட்டையின் மேல் அதிகம் வியர்த்து, முட்டையின் ஓட்டில் உள்ள சிறுதுளைகள் வழியே பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து உள்ளே செல்லுமாம். எனவே முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்து சாப்பிட்டு விட வேண்டும் அல்லது அறை வெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும்.
நாம் வாங்கும் முட்டை பிரஷ்ஷாக இருந்து, அதில் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக்கொண்டிருந்தால், அந்த முட்டையை பிரிட்ஜில் வைக்க கூடாது. ஒருவேளை நீங்கள் வாங்கிய முட்டையில் சால்மோனெல்லா வகை பாக்டீரியா இருந்து, அதனை பிரிட்ஜில் வைத்து பராமரித்தால், இதர முட்டைகளும் அந்த கொடிய பாக்டீரியாவால் தாக்கப்படும். எனவே இதனைத்தவிர்க்க வேண்டுமெனில், அறைவெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும்.
ஒருவேளை முட்டையைப்பயன்படுத்தி கேக் செய்ய வேண்டுமெனில் முட்டையை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது. ஏனெனில் பிரிட்ஜில் வைக்கும் முட்டையினுள் உள்ள கருவானது மிகுந்த குளிர்ச்சியுடன் இருப்பதால், அதைக்கொண்டு கேக் செய்ய நினைத்தால், அந்த கேக் கடினமாக இருக்கும்.
முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகி விடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் சால்மோனெல்லா வகை பாக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும்.
கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது. இந்த பாக்டீரியா சாதாரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வதில்லை. அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் மிக விரைவில் பெருக்கமடைகின்றன. இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating