வெளிநாடுகளில் சக்கை போடு போடும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் விவரம்..!!
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான படம் ‘மெர்சல்’.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்கள் மற்றும் காட்சிகள் தான் இந்தியா முழுவதும் சமீபத்தில் டிரெண்டாகியது.
படம் மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதை என்றாலும் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக பாஜக சார்பாக குற்றம்சாட்டப்பட்டது. அரசியல் பிரச்சனையாக மாறியதால் ‘மெர்சல்’ படத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
கடந்த 4 நாட்களாக திரும்பிய திசையெல்லாம் இதைப்பற்றியே பேச்சு. பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் அந்த படத்தை இதுவரை பார்க்காதவர்களும் அப்படி என்னதான் இருக்கிறது படத்தில் என்று, ஒரு தடவை பார்த்து விடலாமோ என்று எண்ணிக் கொண்டிருக்கும்படி சிந்திக்க வைத்துவிட்டார்கள்.
அந்த அளவுக்கு ‘மெர்சல்’ படத்துக்கு அரசியல் வாதிகளே மிகப்பெரிய விளம்பரத்தை உருவாக்கி கொடுத்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். இவ்வாறாக இந்தியா முழுவதும் பிரபலமான ‘மெர்சல்’ படத்திற்கு உலகளவிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அமீர் கானின் `சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ மற்றும் அஜய் தேவ்கனின் `கோல்மால் அகேன்’ படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், ‘மெர்சல்’ படம் வெளியாகிய 4 நாட்களில் ஆஸ்திரேலியாவில் மட்டும் ‘மெர்சல்’ படம் 345,239 டாலர்களையும் (இந்திய மதிப்பில் 1.76 கோடி), மலேசியாவில் ரூ.3.16 கோடியும் வசூலித்துள்ளது. அதேபோல் பிரிட்டனில் 4 நாட்களில் 283,359 பவுண்ட்களை (ரூ.2.43 கோடிகள்) வசூலித்துள்ளது. நியூசிலாந்தில் 2 நாட்களில் ரூ.9.32 லட்சத்தை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating