`2.0′ படத்தில் தனது காட்சிகளை முடித்த ஏமி ஜாக்சன்..!!
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். தற்போது அந்த பாடல் காட்சி எடுத்து முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மும்பையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் படமாக்கப்பட்ட அந்த பாடல் காட்சிகளை முடித்த ஏமி ஜாக்சன் `2.0′ படத்தில் தனது காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். மேலும் கடைசி இரண்டரை வருடங்களாக நடைபெற்ற `2.0′ படப்பிடிப்பு ஒரு ரோலர் கோஸ்டரைப் போல் ஓடி முடிந்துவிட்டன, எனினும் அதன் உழைப்பு விரைவில் திரையில் அதிர வைக்கப் போகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். கடைசியாக எடுக்கப்பட்ட அந்த பாடலில் ஏமி ஜாக்சனுக்காக வித்தியாசமான ஆடைகளை ஷங்கர் வடிவமைக்க சொல்லி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பாடல் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 27-ல் துபாயில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating