பா.ஜ.க தலைவர்களுடன் சந்திப்பு – சர்ச்சை கருத்துக்களை நீக்க தயார் என மெர்சல் தரப்பில் அறிவிப்பு..!!

Read Time:2 Minute, 7 Second

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது.

இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது.

மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெர்சலுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மெர்சல் திரைப்படத்தை தயாரித்த தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. இது தொடர்பாக பா.ஜ.க மாநில தலைவர்களை சந்தித்து விளக்கமளித்தோம். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் எங்களது அனுகு முறையை பாராட்டினர். அதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அவர்களது பார்வையில் அவர்கள் எதிர்ப்பு நியாமாகவே உள்ளது. தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை நீக்க தயாராகவே இருக்கிறோம்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹேர் கலரிங் கூந்தலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமா?..!!
Next post வீட்டில் பணம் தங்கலையா?… அதுக்கு நீங்க செய்ய வேண்டிய மிகச்சிறிய பரிகாரம் இதுதான்..!!