முகமாலை பகுதியில் புலிகள்- ராணுவம் கடும் சண்டை

Read Time:4 Minute, 12 Second

SL.army-ltte.jpgஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இலங்கையில் மாவிலாறு அணையை விடுதலைப்புலிகள் மூடி விட்டதை தொடர்ந்து, விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே மீண்டும் போர் தொடங்கியது. இது தொடர்கதை போல தொடர்ந்து நடந்து வருகிறது.

திரிகோணமலை கடற்படை தளம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதால் இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் வசம் இருந்த சம்பூரை கைப்பற்றியது. சம்பூரில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்று விடுதலைப்புலிகள் விடுத்த எச்சரிக்கையை ராணுவம் ஏற்றுக் கொள்ளவில்லை.

யாழ்ப்பாணத்தில் சண்டை

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த சனிக்கிழமை முதல் கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் 180 விடுதலைப்புலிகளை கொன்று விட்டதாக ராணுவம் அறிவித்து இருந்தது. இதை விடுதலைப்புலிகள் உறுதிப்படுத்தவில்லை. இந்த சண்டை காரணமாக யாழ்ப்பாணத்துக்கு செல்லும் ஒரே ஒரு பாதையும் துண்டிக்கப்பட்டு விட்டது.

ஏவுகணை தாக்குதல்

மட்டகளப்பு மாவட்டத்தில் கட்சுவாட்டே என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஏற்பட்ட சேத மதிப்பு தெரியவிலை.

மேலும் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளும் இலங்கை ராணுவ வீரர்களும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டனர். விடுதலைப்புலிகளின் நிலைகளை குறி வைத்து இலங்கை ராணுவம் தாக்கி வருகிறது. இப்போது யாழ்ப்பாணத்தில் சில நூறு மீட்டர் தூரம் முன்னேறி சென்று இருப்பதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் தென் மராட்சி, முகமாலை ஆகிய பகுதிகளையும் பிடிக்க ராணுவம் முன்னேறி வருகிறது. ராணுவத்தினரின் முப்படையும் இதில் ஈடுபட்டுள் ளது.

முன்னேறி வரும் ராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் பீரங்கி குண்டுகளையும் ராக்கெட்டுகளையும் வீசி எதிர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் 28ராணுவத் தினர் கொல்லப்பட்டனர். 150க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

முகமாலை பகுதியில் ராணுவம் தனது நிலைகளை பலப்படுத்தி வருவதாக 1 கி.மீ. தூரத்துக்கு முன்னேறி சென்று இருப்பதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால் அந்த பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஏராளமான கண்ணி வெடிகளை புதைத்து வைத்து இருப்பதால் ராணுவம் தொடர்ந்து முன்னேற முடியவில்லை.

”யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருவதால் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை ராணுவம் அவசியமாக கருதுகிறது” என்று இலங்கை பாதுகாப்புப்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிளிநொச்சித் தகவல்கள்… மாணவ, மாணவிகள் புலிகளால் கட்டாய ஆயுதப்பயிற்சி
Next post தமிழ்த் தேசியத்தலைவர் ஆனந்தசங்கரிக்கு யுனேஸ்கோ விருது-