வான் பரப்பில் திடீரென ஏற்பட்ட ஆபத்து! பதற்றத்தில் மக்கள்…!! ( வீடியோ)

Read Time:2 Minute, 10 Second

1837925032tree-arrest-Lசீனாவின் வான்பரப்பில் திடீரென பிரகாசமாக தோன்றிய மர்மபொருளினால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவின் யுவான் மாகாணத்தின் ஷங்கிரிலா நகரின் வான் பரப்பில் தீப்பந்து போன்ற ஒன்றை மக்கள் அவதானித்துள்ளனர்.

முழு நிலவு என நினைத்த பிரதேச மக்கள் அதனை தொடர்ந்து அவதானித்த போதிலும் எரியும் தன்மை கொண்ட மர்ம பொருளாக காட்சியளித்துள்ளது.

அதில் தோன்றிய ஒளி சிறிய அதிர்வுகளை ஏற்படுத்தியதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தீப்பந்து வெடிப்பதற்கு முன்னர் இரண்டு நிமிடங்கள் வரை வானில் பயணித்துள்ளது.

எனினும் அதனை அந்த பகுதி மக்கள் புகைப்படம் மற்றும் காணொளியாக பதிவு செய்வதற்கு நேரம் போதுமானதாக இருந்ததென தெரிவிக்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் இவ்வாறு மர்மமான முறையில் தோன்றும் தீப் பந்துகளை நாசா காண்காணித்து வருகிறது. அதற்கிணங்க நேற்று தோன்றிய மர்மபொருளும் நாசாவினால் கண்காணிக்கப்பட்டுள்ளது.

இந்த மர்மபொருள் 14.6 கிலோமீற்றர் வேகத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்ததாக நாசாவால் கண்காணிக்கப்பட்டுள்ளது.

தீப்பந்து வெடித்தமையினால் ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால் அந்த பகுதியை பார்வையிட்ட சில சுற்றுலா பயணிகள் அங்கு அதிர்வுகளை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாப்பிட்டபின் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்..!!
Next post BiggBoss வீட்டில் ஓவியா செய்த சுட்டி தனமான வேலை- வெளியான சுவாரஸ்ய தகவல்..!!