கங்கனா ரணாவத்தை தனிமையில் சந்தித்ததே இல்லை: ஹிருத்திக் ரோஷன்…!!
நடிகை கங்கனா ரணாவத்தை தனிமையில் ஒருபோதும் சந்தித்ததே கிடையாது என்று நடிகர் ஹிருத்திக் ரோஷன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், நடிகை கங்கனா ரணாவத்தும் தீவிரமாக காதலித்து வந்ததாக கிசுகிசு பரவியது. இதன் காரணமாகவே ஹிருத்திக் ரோஷன் தனது காதல் மனைவி சுசன்னேவை கடந்த 2013-ம் ஆண்டில் விவாகரத்து செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஹிருத்திக் ரோஷனும், கங்கனா ரணாவத்தும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கங்கனா ரணாவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஹிருத்திக் ரோஷனின் பெயரை குறிப்பிடாமல், தன்னுடைய முட்டாள்தனமான முன்னாள் காதலர், தங்களது தனிப்பட்ட இ-மெயில் அரட்டைகளை ஊடகங்களில் வெளியிட்டு தன் மீது சேற்றை வாரி அடிப்பதாக குற்றம்சாட்டினார்.
இதனால், ஹிருத்திக் ரோஷன்- கங்கனா ரணாவத் இடையிலான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. மேலும், ஒருவருக்கொருவர் மாறி, மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி கொண்டதால், திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், இதுபற்றி ஹிருத்திக் ரோஷன் தனிப்பட்ட முறையில் கருத்து ஏதும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில், அவர் முதன்முறையாக மவுனம் கலைத்திருக்கிறார். கங்கனா ரணாவத்துடன் காதல் இருந்ததாக கிசுகிசுக்கப்படுவதை சுட்டிக்காட்டி, அவரது பெயரை குறிப்பிடாமல் பரபரப்பு அறிக்கை ஒன்றை அவர் நேற்று வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-
அறியாமை, கருத்து கூறாமை மற்றும் கண்ணியத்தின் பாதையில் நீடித்து இருப்பது ஆகியவை தேவையற்ற குறுக்கீடுகளை ஊக்கம் இழக்க செய்வதற்கான சிறந்த வழிகள் என்று நான் நம்புகிறேன். உண்மை என்னவென்றால், அந்த பெண்ணுடன் நான் படங்களில் நடித்து இருந்தாலும், அவரை தனிமையில் ஒருபோதும் சந்தித்தது கிடையாது.
2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாரீஸ் நகரில் எங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. இதுபற்றிய புகைப்பட ஆதாரங்களோ, சாட்சிகளோ, நினைவுக்குறிப்புகளோ எதுவும் இல்லை. மேலும், அந்த தருணத்தில் நான் நாட்டை விட்டு வெளியே எங்கேயும் செல்லவில்லை என்பதற்கு என்னுடைய பாஸ்போர்ட் விவரங்கள் ஆதாரம்.
இந்த அத்தியாயத்தில் பாதிக்கப்பட்டது நான் தான். என்னுடைய நற்பெயரை காப்பாற்றி கொள்ள தான் நான் போராடுகிறேனே தவிர, காதல் பிரச்சினைக்காக அல்ல. ஆகையால், இதனை காதல் பிரச்சினையாக ஊடகத்தினர் அணுக வேண்டாம்.
இவ்வாறு ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.
எனினும், அவரது இந்த கருத்தை நடிகை கங்கனா ரணாவத்தின் வக்கீல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், ஹிருத்திக் ரோஷன் பிரச்சினையை திசைதிருப்பும் தந்திரங்களை கையாள்வதாக அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating