4 வேடங்களில் நடித்தது சவாலாக இருந்தது: துல்கர் சல்மான்…!!

Read Time:2 Minute, 34 Second

201710042132049274_4-roles-were-challenging-says-dulquer-salman_SECVPF

துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சோலோ’. இந்த படத்தில் நான்கு வேடங்களில் நடித்துள்ள துல்கர் சல்மான், இதில் நடித்தது சவாலாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.

மலையாளம், இந்தி, தமிழில் விக்ரம் – ஜீவா நடித்த ‘டேவிட்’ உள்பட பல படங்களை இயக்கியவர் பிஜாய் நம்பியார். இப்போது, இவரது இயக்கத்தில் துல்கர் சல்மான் தமிழ், மலையாளத்தில் நேரடியாக நடித்திருக்கும் படம் ‘சோலோ’. இதை தெலுங்கு, இந்தியிலும் ‘டப்’ செய்து வெளியிடுகிறார்கள்.

இதில் துல்கர்சல்மான் 4 கெட்டப்களில் நடித்திருக்கிறார். இவருடைய ஜோடியாக தன்ஷிகா, சுருதி ஹரிகரன், ஆர்த்தி வெங்கடேஷ், நேகாசர்மா ஆகியோர் நடித்துள்ளனர். நகைச்சுவை வேடத்தில் சதீஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய துல்கர்சல்மான், இந்த படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகிறார்….

“இதுவரை நான் நடித்த படங்களில் இதுதான் உலக அளவில் ரிலீஸ் ஆகிறது. அதனால்தான் இது 4 மொழிகளில் வெளியிடப்படுகிறது. நான் நடித்த பெரிய பட்ஜெட் பட வரிசையில் இதுவும் இணைந்துள்ளது.

இந்த படத்தில் எனக்கு நான்கு விதமான வேடம் என்பதால் ஒவ்வொரு வேடத்திலும் ஒரு வித்தியாசம் காட்டி நடித்தேன். இது சவாலாக இருந்தது. இந்த படத்தை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தனித்தனியாக படமாக்கி இருக்கிறோம். இயக்குனரும், நானும் மலையாளத்தை தாய் மொழியாக கொண்டவர்கள். தன்ஷிகா, சுருதி தவிர மற்றவர்கள் மராட்டிய மொழி நடிகைகள்.

எனவே, மலையாள படத்தை தமிழில் ‘டப்’ செய்து வெளியிடுகிறார்கள் என்று எண்ண வேண்டாம். இது நேரடி தமிழ் படம். அனைவரும் ரசிக்கும் கதையம்சம் கொண்டது” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் மூக்கில் முள் போன்று உள்ள கரும்புள்ளிகளை போக்குவது எப்படி?..!!
Next post நடிகை திரிஷாவின் நிலையை பாருங்களே..! திருடி மாட்டிக்கொண்டாராம்..!!