அத்திப்பழத்தை அதிகளவு சாப்பிட்டால் ஆபத்து…!!

Read Time:4 Minute, 10 Second

201710041322165546_risk-of-eating-figs-is-very-high_SECVPFஒரு நாளைக்கு ஒரு அத்திப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. அதுவும் காய்ந்த அத்திப்பழத்தை சாப்பிடுகையில் கவனமாக இருக்க வேண்டும்.

அத்திப்பழத்தை அதிகளவு சாப்பிட்டால் ஆபத்து
அத்திப் பழம் உடல் நலனுக்கு மிகவும் நல்லது அதோடு இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு மீறி எடுக்கும் போது அது நம் உடலுக்கு தீங்கையே ஏற்படுத்திடும் என்பதை நாம் உணர வேண்டும். சத்துக்கள் நிறைந்த பழமாக இருந்தாலும், அவை நம் உடலின் தேவைக்கு அப்பாற்ப்பட்டு எடுக்கும் போது கழிவாகவே சேருகிறது. இதனால் எண்ணற்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

ஒரு நாளைக்கு ஒரு அத்திப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. அதுவும் காய்ந்த பழம் சாப்பிடுகையில் கவனமாக இருக்க வேண்டும்.

இந்தப் பழத்தில் கரையக்கூடிய ஃபைபர் நிறையவே இருக்கிறது. சுமார் 100 கிராம் அளவில் 2.9 கிராம் வரை ஃபைபர் மட்டுமே இருக்கிறது. இப்படி ஃபைபர் நிறைந்த உணவினை தொடர்ந்து எடுத்து வர அவை வயிற்றுப் போக்கு ஏற்படுத்திடும். சில சமயங்களில் இது வயிறு உப்புசத்தையும் ஏற்படுத்திடும்.

அத்திப்பழம் காய்ந்த பழமாக எடுப்பதையே பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதில் அதிகளவு கார்போஹைட்ரேட் சேர்ந்திருக்கும். 100 கிராம் அளவுள்ள பழத்தில் 16 கிராம் அளவு சர்க்கரைச் சத்து மட்டுமே இருக்கும். சரியாக பற்களை பராமரிக்காமல் தொடர்ந்து அதிகளவு சர்க்கரைப் பொருளை எடுத்து வந்தால் அவை பற்களை பாதிக்கும்.

காய்ந்த அத்திப் பழத்தில் அதிகளவு சல்ஃபைட் இருக்கும். சல்ஃபைட் என்பது ஒருவகையான ரசாயனம் இவை உணவுப்பொருள் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் சிரமங்கள் உண்டாகும். அதிகச் சுவையுடைய உணவினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது காய்ந்த அத்திப் பழத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டாலோ மூச்சுப்பிரச்சனைகள் உண்டாகும்.

அத்திப் பழத்தை அளவுக்கு மீறி அதிகளவு எடுத்துக் கொண்டால் அது நம் ரத்தச் சர்க்கரையளவை அதிகரிக்கும். திடீரென ரத்தச் சர்க்கரையளவு அதிகரிப்பதால் மைக்ரேன் தலைவலி ஏற்படும். அதிலும் காய்ந்த அத்திப் பழத்தில் இருக்கும் சல்ஃபைட் உட்பட சில கெமிக்கல்கள் தலைவலி ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திடும்.

அத்திப்பழத்தை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுகிறவர்கள் தங்களின் ரத்தச் சர்க்கரையளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இதில் இருக்கும் சர்க்கரை அளவும் நம்முடைய அன்றாட உணவுகளில் இருந்து வருகின்ற சர்க்கரைச் சத்தும் சேர்த்து ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்திடும். இதனால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதோடு, அதிக ஃபைபர் இருக்கும் அத்திப்பழத்தை எடுப்பதால் உணவு ஜீரணப்பதில் சிக்கல்கள் உண்டாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேற்றுகிரகவாசிகளின் நிஜ உருவம்: வைரலாகும் புகைப்படம்..!!
Next post குறும்படத்தில் நடித்த திரிஷா…!!