நிறத்தை மாற்ற பல லட்சம் செலவு செய்த களஞ்சியம்…!!
இயக்குனர் மற்றும் நடிகரான மு.களஞ்சியம், படத்திற்காக தன்னுடைய நிறத்தை மாற்ற பல லட்சம் செலவு செய்திருக்கிறார்.
டி.கிருஷ்ண குமார் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள படம் ‘களவு தொழிற்சாலை’. இந்த படத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இயக்குனர் களஞ்சியம் நடித்துள்ளார்.
இதில் நடித்தது குறித்து களஞ்சியம் கூறும்போது, “இந்த படத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் வேலை செய்யும் இர்பான் என்கிற இஸ்லாமிய அதிகாரியாக நடித்திருக்கிறேன். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாத்திரம். அதில் நடிக்க தடையாக இருந்தது எனது நிறம். எனது நிறத்தை கொஞ்சம் வெளுப்பாக மாற்றி, ஓர் இஸ்லாமியர் போல தோற்றத்தை கொண்டு வந்தால் நீங்கள் நடிக்கலாம், முடியுமா? என்று இயக்குனர் டி.கிருஷ்ணசாமி என்னிடம் கேட்டார்.
அதை ஏற்று சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி தலைமை மருத்துவர் கார்த்திக்கை சந்தித்தேன். அவர் மூன்று மாதம் போராடி எனது நிறத்தை மொத்தமாக மாற்றினார். இதற்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்தேன். எனது ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் பரிசாக ‘களவு தொழிற்சாலை’ படத்தில் நடிக்கிற வாய்ப்பை படத்தின் இயக்குனர் எனக்கு அளித்தார். படத்தின் வெற்றியும் எனது கதாப்பாத்திரத்தின் வெற்றியும் எனக்கு பெரும் மகிழ்வை தந்துள்ளது.
புதுமுகங்களை வைத்து நான் தயாரித்து இயக்கி முடித்திருக்கிற ‘முந்திரிக்காடு’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இனி தொடர்ந்து நடிப்பேன்” என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating