நடிகர் சங்க 64-வது பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு அழைப்பு…!!
நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் 8-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு நடிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் 8-ம் தேதி (ஞாயிறு) மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெற இருக்கிறது.
இதற்கான அழைப்பு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கபட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள், மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் என பலரும் கலந்து கொள்கிறார்கள்.
நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்த இருக்கிறார். துணை தலைவர் கருணாஸ் 2016-2017-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு, செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதல் பெறுவார்.
பொருளாளர் கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் பற்றிய விளக்க உரை நிகழ்த்த உள்ளார். அதனைத் தொடர்ந்து சங்கத்தின் கடந்த கால செயல்படுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி பொதுச் செயலாளர் விஷால் விளக்கி கூட்டத்தில் ஒப்புதல் பெறுவார்.
அதனைத் தொடர்ந்து நாசர் தலைமை உரையாற்றுவார். துணை தலைவர் பொன்வண்ணனின் நன்றி உரையுடன் பொதுக்குழு கூட்டம் நிறைவு பெறும்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் வந்து தவறாமல் பங்கேற்க வேண்டுமென்றும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating