சருமத்திற்கு அழகை தரும் ரெட் ஒயின் ஃபேஷியல்…!!

Read Time:4 Minute, 39 Second

201709261501173943_red-wine-facial_SECVPFஎல்லா நற்பலனும் சேர்ந்து ரெட் ஒயின் பேஷியலை சரும பொலிவிற்கு சிறந்த தீர்வாக காட்டுகின்றன. சருமத்தை இறுக்கமான வைக்க உதவுவதால் வயது முதிர்வு தடுக்கப்படுகிறது.

சருமத்திற்கு அழகை தரும் ரெட் ஒயின் ஃபேஷியல்
ரெட் ஒயின் பேஷியல் முறை ஆகும். இதன்மூலம் உங்கள் இளமை, அழகு போன்றவை எளிதில் மீட்டு தரப்படும். வெளியில் இருக்கும் மாசு, புகை, சூரிய ஒளி போன்றவற்றால் நமது சருமம் எளிதில் பாதிப்படைகிறது. இந்த பாதிப்பை நீக்கி சருமத்திற்கு மீண்டும் அழகை தரும் எல்லா மூலப்பொருட்களும் ரெட் ஒயினில் உள்ளது.

ரீசார்வட்டால் என்னும் கூறு ரெட் ஒயினில் அதிகமாக உள்ளது. இது சருமத்தில் உள்ள ஆக்ஸைடை வெளியேற்றி சருமத்தை மென்மையாக்குகிறது. நரம்பு மண்டலத்தை பாதுகாத்து மூளைக்கு சுறுசுறுப்பை தருகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அல்சைமர் போன்ற நோய்களை தடுக்கிறது.

சில நிமிட ரெட் ஒயின் பேஷியல் பல வித நன்மைகளை நமக்கு செய்கிறது. ரெட் ஒயினில் இருக்கும் பாலிபீனால்கள் உடலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. ரெட் ஒயின் பேஷியல் செய்வதால் தீங்கு விளைவிக்கும் கூறுகள் சருமத்தில் தோன்றாமல் தடுக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

ஒரே நாளில் தோலில் ஏற்பட்ட சுருக்கங்களை நீக்கி வயது முதிர்வை தடுக்கிறது. ரெட் ஒயின் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதால், எக்ஸீமா, கட்டி, பரு போன்றவை வராமல் தடுக்கிறது. இவை எல்லா நற்பலனும் சேர்ந்து ரெட் ஒயின் பேஷியலை சரும பொலிவிற்கு சிறந்த தீர்வாக காட்டுகின்றன. சருமத்தை இறுக்கமான வைக்க உதவுவதால் வயது முதிர்வு தடுக்கப்படுகிறது.

ரெட் ஒயின் பேஷியல் க்ரீம் கடைகளிலும் கிடைக்கிறது. ஆனால் அதனை வீட்டிலேயே செய்யும்போது நமக்கு பிடித்த வாசனை பொருட்கள் சேர்த்து நமக்கு விருப்பமான முறையில் தயார் செய்யலாம்.

தேவையானவை :

யோகர்ட்
தேன்
ரெட் ஒயின்

மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை உடனடியாக உபயோகிப்பது சிறந்தது. வைத்து பயன்படுத்த வேண்டாம்.

முகத்தை வெந்நீரால் நன்றாக கழுவவும். இதனால் சரும துளைகள் திறக்கப்பட்டு சிகிச்சைக்கு ஏற்புடையதாக இருக்கும். மேலே சொன்ன கலவையை முகத்தில் தடவவும். தடவியபின் நன்றாக மசாஜ் செய்யவும். 5-7 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். முகம் அந்த கலவையை உறிஞ்சி கொள்ளும்.

பிறகு அறையில் இருக்கும் வெளிச்சத்தை குறைத்து, நல்ல இசையை கேட்டு கொன்டே, ரோஜா இதழ்கள் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பிய பாத் டப்பில் படுத்தபடி மனது மற்றும் உடலை ரிலாக்ஸ் செய்யலாம். இந்த சூழல் உங்களுக்கு ஒரு அமைதியை கொடுக்கும். சிறிது நேரத்திற்கு பின் முகத்தை நன்றாக கழுவவும். தேனுக்கு பதில் கற்றாழை அல்லது முட்டை வெள்ளை கருவையும் பயன்படுத்தலாம்.

இயற்கை தீர்வுகளை முயற்சி செய்யும் போது தொடர்ச்சியான பயன்பாடு நல்ல பலனை தரும். ரெட் ஒயின் பேஷியல் முறையை வாரத்திற்கு 2 முறை செய்யும் போது விரைவில் நல்ல மாற்றத்தினை உணரமுடியும். இரசாயன ஒப்பனைகளுக்கு ஒரு மாற்றாக ரெட் ஒயின் பேஷியல் இன்று உணரப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்ப காலத்தில் அந்தரங்க உடலுறவு..!!
Next post 77 வருடங்களாக உணவு, நீர் இல்லாமல் வாலும் அதிசய மனிதர்…!!