ஹரஹர மஹாதேவகி படத்தில் நடித்தது ஏன்? – நிக்கி கல்ராணி பதில்…!!

Read Time:2 Minute, 11 Second

201709261333545810_Why-acting-Harahara-Mahadevakai-film-Nikki-Galrani-answer_SECVPFதணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தில் நடித்தது ஏன் என்று படத்தின் நாயகி நிக்கி கல்ராணி பதிலளித்துள்ளார்.

கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்துள்ள படம் ‘ஹரஹர மகாதேவகி’. புதிய இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி உள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூறும்போது,

“இது 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம். ‘ஏ’ சான்று பெற்ற படம். ஆனால் எந்த தப்பான காட்சியும் இதில் இருக்காது. முதல் பாதி காதல். இரண்டாம் பாதி அதில் பிரிவு என்று பரபரப்பாக கதை நகரும்” என்றார்.

இதில் பேசிய நிக்கி கல்ராணி, “என்னுடைய எல்லா படத்தையும் போல இதுவும் நல்ல படம் தான். இந்த படம் ஒரு ‘அடல்ட் காமெடி’ படம். இந்த படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் சந்தர்ப்ப சூழ்நிலையில் வருவது போல் தான் இருக்கும். கதை பிடித்திருந்ததால் நான் நடித்தேன்.

இந்த படத்தில் யாரையும் தப்பாக காட்டுவது போல் காட்சிகள் இல்லை. ஆபாசம், வன்முறை இல்லாமல் இந்த படத்தை நாங்கள் எடுத்துள்ளோம். என்னை தப்பாக காட்டும் ஒரு படத்தில் நானே நடிக்க மாட்டேன்” என்று கூறினார்.

கவுதம் கார்த்திக், “இது முழுமையாக காமெடி எண்டர்டெய்னர். ஒரு இடத்தில் நான்கு நண்பர்கள் கூடினால் அவர்களுக்குள் எப்படி பேசிக்கொள்வார்களோ அதேபோல் தான் இப்படத்தில் காட்சிகள் இருக்கும்” என்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலைப்போல் குவிந்து கிடக்கும் கொடிய பாம்புகள்… தெறிக்கும் எரிமலை… நரகம் பூமியில்தான் இருக்கிறது?…!!
Next post கோடியை கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்குமா இத்தருணம்?.. மகிழ்ச்சியின் உச்சக்கட்டம்…!!(வீடியோ)