காதலிக்க மறுத்ததால் பெண் உயிருடன் எரித்துக் கொலை..!!

Read Time:1 Minute, 55 Second

201709251701131233_Girl-burnt-to-death-jilted-lover-his-father-detained_SECVPFராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள இசார்வால் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்ற வாலிபர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று பேச முயன்றுள்ளார். ஒரு நாள் அதே போல் பெண்ணிடம் பேச முயன்ற போது கோபத்தில் அந்த பெண் வாலிபரை அடித்ததாக கூறப்படுகிறது. இது வாலிபருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அந்த பெண் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ரவி மற்றும் அவரது தந்தை, அந்தப் பெண்ணை வழிமறித்து தாக்கி அவரது உடல் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் அந்த பெண் படுகாயமடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த பெண் இறப்பதற்கு முன் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், ரவி தன் மீது மண் எண்ணெய் ஊற்றியதாக கூறினார். ஆனால் தீப்பற்ற வைத்தது யார் என்பது குறித்து தெரியவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

இதையடுத்து, போலீசார் ரவி மற்றும் அவரது தந்தையை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 ரூபாய் சம்பளம் வாங்கினேன் – பல குரல் நடிகனின் கதை..!!
Next post பிக்பாஸில் தனக்கு பிடித்த நபர் ஆரவ் இல்லை… ஒவியா அதிரடி பேச்சு…!!(வீடியோ)