திருமணத்துக்கு பிறகு நடிக்கமாட்டேன் – சுமங்கலி திவ்யா…!!

Read Time:1 Minute, 51 Second

201709251549213616_I-will-not-act-after-marriage-Sumangali-Divya_SECVPFசுமங்கலி சீரியலில் நாயகியாக நடித்து வரும் திவ்யா, தயாரிப்பாளர், நடிகர் ஆர்.கே.சுரேஷுடன் திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

திரைப்பட தயாரிப்பாளராகவும், பட வினியோகஸ்தராகவும் இருந்த ஆர்.கே.சுரேஷ் ‘தாரைதப்பட்டை’ படம் மூலம் வில்லன் ஆனார். தற்போது ‘பில்லாபாண்டி’, ‘தனிமுகன்’, ‘வேட்டைநாய்’ படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ஆர்.கே. சுரேசுக்கும், ‘சுமங்கலி’ தொடர் நாயகி திவ்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இது குறித்து கூறிய திவ்யா…

“எங்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. ஐப்பசியில் திருமணம் நடைபெறும். இன்னும் தேதி முடிவாக வில்லை. இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எங்கள் இருவருக்கும் சொந்த ஊர் ராமநாதபுரம் தான்.

இப்போது, ‘சுமங்கலி’ சீரியலில் நாயகியாக நடித்து வருகிறேன். ‘அடங்காதே’ படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்திருக்கிறேன். திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன். ஏற்கனவே ஒப்பந்தமான ‘சுமங்கலி’ சீரியல் முடியும் வரை அதில் நடித்துக்கொடுப்பேன். அதன் பிறகு சினிமா, சீரியல் எதிலும் நடிக்க மாட்டேன். முழு நேர இல்லத்தரசி ஆகி விடுவேன்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட இஞ்சியை இனியும் ஒதுக்காதீர்கள்..!!
Next post ஆணுக்கும் பெண்ணுக்கும் தம்பதிகள் கவனத்துக்கு சில..!!